‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி..!!

Read Time:1 Minute, 57 Second

201706051502534513_Huma-Querashi-reveals-about-her-role-in-Kaala_SECVPFரஜினியின் ‘காலா’ படப்பிடிப்பு கடந்த 28-ந்தேதி தொடங்கியது. பா.ரஞ்சித் இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து நடைபெறுகிறது. தினமும் ரஜினியை பார்க்க பெரும் கூட்டம் வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முதலில் ரஜினி, சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்த புகைப்படங்கள் வெளியாகின. அடுத்து ரஜினி பேசிய பஞ்ச் வசனம் வெளியானது. இந்த படத்தின் நாயகியாக நடிக்கும் இந்தி நடிகை ஹூமாகுரேஷி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. ஆனால் ‘காலா’ படத்தில் அவருக்கு என்ன வேடம் என்பது ரகசியமாக இருந்தது. இப்போது அதையும் ஹூமாகுரேஷி போட்டு உடைத்திருக்கிறார்.. இதுபற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள அவர், ‘காலா’ படத்தில் எனது பெயர் ஜரீனா. நான் ஜரீனாவாக மாறிக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விடவில்லை. அவருக்கு நடிப்பதற்காக கொடுக்கப்பட்ட காட்சி பற்றிய குறிப்பு அடங்கிய பேப்பர்களையும் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள படத்தில் காலா பீம்ஜியுடன் பைக்கில் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் மூலம் இன்னும் ஏராளமான தகவல்கள் வெளியாகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுவரவு: எல்ஜி X500 ஸ்மார்ட்போன் அறிமுகம்..!!
Next post கொதிக்கும் தண்ணீரால் உயிரிழந்த குழந்தை: ஈவு இரக்கமில்லாத செயலை செய்த பெற்றோர்..!!