முதுகு வலி வருவதற்கான பொதுவான காரணங்கள்..!!

Read Time:6 Minute, 1 Second

201706060840203921_Common-causes-of-back-pain_SECVPFமுதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது. இதற்காக மருத்துவரிடம் செல்பவர் அநேகர். முதுகுவலி, கீழ் முதுகு வலியெல்லாம் கடினம்தான் என்றாலும் பொதுவில் ஆபத்தானதாக இருப்பதில்லை. முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.

தண்டு வடம் தசை, தசைதார், எலும்பு அதன்பிரிவு என பல அமைப்புகளை தன்னுள் கொண்டது. இதில் ஏதேனும் பாதிப்பு இருப்பதால் முதுகு வலி ஏற்படலாம்.
அதிக உழைப்பு: இதுதான் முதுகு வலியின் முதல் காரணம். இயந்திரத்தனமான உழைப்பும், ஓட்டமும் கைகளையும், கால்களையும் மொத்தத்தில் உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் நாம் முனைந்து கெடுக்கின்றோம். இதன் காரணமாக.

* அதிகம் உழைத்த தசை
* அதிகம் உழைத்த தசை கால்கள்
* தசை பிடிப்பு
இவைகள் வலிக்கு காரணமாகின்றன.
* முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது.
* முறையற்ற முறையில் அதிக கனமான பொருட்களை தூக்குவது
* கோணல் மாணலாக படுப்பது, தூக்குவது

இவை பொதுவில் முதுகு வலிக்கான காரணங்கள்.

* முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு.
* சயாடிகா-இடுப்பின் கீழே பின் காலின் வழியில் ஏற்படும் வலி.
* மூட்டு வலி
* எலும்பு தேய்மானம்
* முதுகு தண்டு வளைவு
இவைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.

* தண்டு வட புற்று நோய்
* தண்டுவட கிருமி தாக்குதல்
* தூக்கம் சரிவர இன்மை
* முறையான படுக்கையின்மை
ஆகியவை காரணமாகவும் முதுகு வலி ஏற்படலாம். கீழ்கண்ட காரணங்கள் உங்கள் முதுகு வலிக்கு காரணமாக இருக்கலாம் என்பதனை அறியுங்கள்.

* அதிக மன உளைச்சலையுடைய வேலை.
* கர்ப்ப காலம்
* அதிக உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை
* முதுமை
* படபடப்பு
* மனக் கவலை
* பெண்களுக்கு ஆண்களை விட முதுகு வலி அதிகமாக இருக்கும்.
* அதிக எடை
* புகை பிடித்தல்
* அதிக உழைப்பு
* முறையற்ற அதிக நேர உடற்பயிற்சி
ஆகியவை ஆகும்.

முதுகு வலியுடன் கீழ்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனடியாக தாமதிக்காது மருத்துவரை அணுக வேண்டும்.

* எடை குறைதல்
* ஜுரம்
* வீக்கம்
* விடாத தொடர் வலி
* காலில் இறங்கும் வலி
* முட்டிக்கு கீழ் இறங்கும் வலி
* ஏதாவது அடி, காயம்
* சிறுநீர் செல்வதில் பிரச்சினை
* கழிவு வெளியேறுவதில் பிரச்சினை
* பிறப்புறுப்புகள் மரத்து போதல்
* எக்ஸ்ரே
* எம்.ஆர்.ஐ.
* சிடி ஸ்கேன்
போன்று பல வகை பரிசோதனைகள் மூலம் பாதிப்புகளை அறிய முடியும்.

பாதிப்புக்கேற்ப சிகிச்சை முறைகள் அளிக்கப்படும்.

சயாடிகா எனும் தடித்த நரம்பு முதுகின் கீழ் பகுதியிலிருந்து காலின் பின் வழி இறங்குவது. இதில் வலி வரும் பொழுது
* கீழ் முதுகு வலிக்கும்
* உட்காரும் பொழுது வலிக்கும்.
* இடுப்பு வலிக்கும்.
* காலில் எரிச்சல், வலி இருக்கும்.
* கால், பாதத்தில் மரத்து போதல், வலி இன்றி இருத்தல், காலை நகர்த்துவதில் கடினம் ஆகியவை இருக்கும்.
* எழுந்து நிற்க முயலும் பொழுது தாங் கொண்ணா வலி இருக்கும்.

இந்த வலிக்கான காரணங்கள்

* தண்டு வட பிரச்சினை
* கர்ப்பம்
* இடுப்பில் சதை பிடிப்பு
ஆகியவை ஆகும்.
தொடர்ந்து வலி இருந்தால்
* பக்க வாட்டில் திரும்பி படுத்து உறங்குங்கள்.
* உங்கள் படுக்கை மெத்தென இருக்கக் கூடாது. கடினமாக உறுதியாக இருக்க வேண்டும்.
* மருத்துவ ஆலோசனை பெற்று தரையில் பாய் போட்டு படுக்கலாம்.
* உட்காரும் பொழுது நாற்காலியில் கூன் போட்டு, குறுகி வழிந்து உட்காராதீர்கள்.

* பாதம் பூமியில் முறையாய் படிந்து இருக்க வேண்டும்.
* மருத்துவ உதவியுடன் வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.
* மனஉளைச்சல் நிவாரணத்திற்கு மருந்து, மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
* உடற்பயிற்சியாளர் உதவியுடன் தகுந்த உடற்பயிற்சிகள் செய்யலாம்.
* வலி என்று அதிக ஓய்வு வேண்டாம். சிறிது சிறிதாக நடக்க ஆரம்பியுங்கள்.
* வலி இருக்கும் இடத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். 20 நிமிடங்கள் வரை செய்யலாம். முதல் 2, 3 நாட்கள் நாள் ஒன்றுக்கு 3 முறையாவது ஐஸ் ஒத்தடமும் பின்னர் சூடு ஒத்தடமும் கொடுக்க வலி நிவாரணம் கிடைக்கும்.
* முறையான ‘மசாஜ்’ நல்லதே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாந்தனுவுக்கு கீர்த்தி போட்ட கண்டிஷன்..!!
Next post 6-வயது சிறுமியை காட்டு மிராண்டித்தனமாக அடித்த பெண்.. கதறி துடித்த பரிதாபம்..!! (வீடியோ)