பன்றிக்கறி சாப்பிட்டால் மூலநோய் குணமாகுமா?..!!

Read Time:2 Minute, 41 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)பன்றிக் கறியைச் சாப்பிட்டால் மூலநோய் (Piles) குணமாகும் என்பது உண்மையா? என்று கேட்டால் இல்லை என்பது தான் உண்மை.

ஏனெனில் பன்றிக் கறியைச் சாப்பிடுவதால் மூலநோய் குணமாகும் என்று கூறுவதற்கு, எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆனால் அடிக்கடி பன்றிக் கறியைச் சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தான் அதிகரிக்கும்.

பன்றிக் கறியில் உள்ள சத்துக்கள் என்ன?

100 கிராம் பன்றிக் கறியில், புரதம் 26 கிராம், கொழுப்பு 18 கிராம், விட்டமின் B12, B6, இரும்புச்சத்து, துத்தநாகம், செலினியம், நியாசின் போன்ற தாதுச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.

மூலநோய் உள்ளவர்களுக்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். ஆனால் இந்த பன்றிக் கறியில் நார்ச்சத்தும், கார்போஹைட்ரேட்டும் சுத்தமாக இல்லை.

எனவே இந்த பன்றிக் கறியை சாப்பிடுவதால், அதில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு உடல் பருமனை அதிகரிக்கவும், முதியவர்களுக்கு தசை வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், ரத்தச் சோகை பிரச்சனையை குணமாக்கவும் உதவுகிறது.

மூலநோய் எப்படி ஏற்படுகிறது?

உடலில் அசுத்த ரத்தம் கொண்டு செல்லும் சிரை ரத்தக் குழாய்களில் குறிப்பிட்ட இடைவெளிகளில் வால்வுகள் உள்ளது. சிரைக் குழாய்களில் ரத்தம் தேவையில்லாமல் தேங்கி நிற்பதை இந்த வால்வுகள் தடுக்கின்றது.

ஆனால், நம் உடல் அமைப்பின்படி, ஆசனவாயிலிருந்து மலக்குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்த வால்வுகள் இல்லை. இதனால் புவியீர்ப்பு விசை காரணமாகச் சாதாரணமாகவே அங்கே அழுத்தம் அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் ஏதாவது ஒரு காரணத்தால் இந்த அழுத்தம் கொஞ்சம் அதிகமானால் கூட, அவற்றில் ரத்தம் தேங்கி ரத்தக் குழாய் வீங்கிவிடும். இதை தான் மூலநோய் என்கிறோம். இந்த மூலநோயில் வெளி மூலம், உள் மூலம் என்று இரண்டு வகை உண்டு.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சன்னி லியோன் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு..!!
Next post பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி: அதிர்ந்துபோன உரிமையாளர்..!! (வீடியோ)