இன்று திருமண நாள்: பட்டுப்புடவையை இஸ்திரி செய்த போது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி..!!

Read Time:4 Minute, 8 Second

201706071843082152_marriage-day-Iron-silk-young-girl-died-electric-shock_SECVPFகோவை இருகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மகேந்திரன். தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கோகிலா(வயது 23). இவர்களுக்கு 1¼ வயதில் ஒரு மகள் உள்ளார்.

மகேந்திரன்-கோகிலா தம்பதிக்கு இன்று திருமண நாளாகும். எனவே இன்று கோவிலுக்கு செல்லலாம் என திட்டமிட்டனர். நேற்று மாலை மகேந்திரன் ஒரு திருமண வீட்டுக்கு சென்றார். வீட்டில் கோகிலாவும், மகளும் இருந்தனர். மகள் வெளியே சென்று விடாமல் இருப்பதற்காக கதவை உள் பக்கமாக பூட்டிய கோகிலா கோவிலுக்கு செல்வதற்காக தனது பட்டுப்புடவையை இஸ்திரி செய்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அயர்ன்பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கி கோகிலா தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார். இரவு 10 மணிக்கு மகேந்திரன் வீடு திரும்பிய போது கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு கோகிலா மயங்கி விழுந்து கிடப்பதை கண்ட அவர் ‘அயர்ன்பாக்ஸ் சுவிட்சை’ அணைக்க முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது.

இதனால் அவர் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் சுவிட்சை ஆப் செய்து கோகிலாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் கோகிலா இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து அவரது உடல் பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ் விசாரணை நடத்தினார். திருமண மாகி 2 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

கோவை செல்வபுரம் வடக்குமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம் (27). கேபிள் டி.வி. ஊழியர். இவர் நேற்று மாலை எல்.ஐ.சி. காலனியில் ஒருவர் வீட்டில் கேபிள் பழுதை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இவர் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெகமம் அருகில் உள்ள ஜல்லிபட்டி அரசமரத்து தோட்டத்தை சேர்ந்தவர் துரைசாமி(45). இவர் விவசாயம் செய்து கொண்டு தேங்காய் வியாபாரமும் செய்து வந்தார்.

நேற்று தேங்காயை எலக்ட்ரானிக் எடை தராசில் எடை போட்டுக் கொண்டிருந்தார் அப்போது தராசு பழுதாகி நின்று விட்டது. அதை சரி செய்வதற்காக தராசு மேல் கை வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 39 வயதில் 38 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்..!! (வீடியோ)
Next post டிவி நிகழ்ச்சிக்கு 15 கோடி சம்பளம் வாங்கும் கமல்..!!