மியான்மர் இராணுவ விமானம் கடலில் விழுந்தது: 116 பேரில் 15 பேர் உயிருடன் மீட்பு..!! (வீடியோ)

Read Time:2 Minute, 45 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)மியன்மாரில் 116 பேருடன் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இராணுவ விமானம் அந்தமான் கடலில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றாம் இணைப்பு

மியன்மாரில் காணாமல் போனதாகக் கருதப்பட்ட இராணுவ விமானம் அந்தமான் கடலில் விபத்துக்குள்ளாகியிருந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்கப்பட்டவர்களின் நிலை குறித்து செய்திகள் எதுவும் வெளிவரவில்லை.

இரண்டாம் இணைப்பு:

விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டவெய் நகரத்தின் மேற்கே சுமார் 20 மைல் தொலைவில் அந்தமான் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளது.

மேலும், 15 பயணிகள் உயிருடன் இருப்பதாகவும், எஞ்சிய பயணிகளை காணவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு:

105 பயணிகள் உட்பட 116 பேருடன் ராணுவ விமானமொன்று Myeik நகரிலிருந்து Yangon நகருக்கு புறப்பட்டது.

நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, டாவி நகரிலிருந்து 20 மைல்கள் தொலைவில், உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் ராணுவ விமானத்துடனான தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

இத்தகவலை உறுதி செய்துள்ள மியான்மர் ராணுவ மூத்த அதிகாரி, விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

வானிலையில் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக விமானம் மாயமாகியிருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதிதாக திருமணமான கணவன் மனைவியின் ஒப்பந்தம்.. இறுதியில் மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
Next post பசியின் கொடுமை… ஆடு எதை சாப்பிட்டது தெரியுமா? படிங்க அச்சச்சோ என்று நிச்சயம் அனுதாபப்படுவீங்க..!!