டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய குஷ்பு..!!

Read Time:1 Minute, 48 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90திமுகவில் இருந்த போது கருணாநிதியுடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ப்ரொபைல் படமாக மாற்றிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கட்சியில் இருந்த நடிகை குஷ்பு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியை காங்கிரஸ் கட்சி கொடுத்தது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவிற்காக சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எவ்வளவோ முயன்றும் குஷ்புவால் அவரைச் சந்திக்க முடியவில்லை.

இதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்ற செய்திகள் வெளியாகின, மேலும் காங்கிரஸில் இருந்து குஷ்பு ஓரங்கட்டப்படுவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் குஷ்பு கருணாநிதியுடன் உள்ள படத்தை ட்விட்டர் ப்ரொபைல் படமாக வைத்துள்ளது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.

வைரவிழா கண்ட கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாகக் கூட குஷ்பு அப்படத்தை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்: 4 சிறுவர்கள் செய்த கொடூர செயல்..!!
Next post பார்வையாளர்களை ஒருகணம் அதிர்ச்சியில் உறைய வைத்த தருணம்… கண்ணிமைக்காம பாருங்க..!! (வீடியோ)