அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஷரபோவா, ஹெனின் கால் இறுதிக்கு தகுதி

Read Time:2 Minute, 26 Second

Tennis.jpgகிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நிலை வீராங்கனையான ஜஸ்டின் ஹெனின் (பெல்ஜியம்), 4-வது சுற்றில் இஸ்ரேலை சேர்ந்த ஷகார் பீரை எதிர்கொண்டார். இதில் ஹெனின் 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

3-ம் நிலை வீராங்கனை யான மரியா ஷரபோவா (ரஷியா), 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நா லீயை (சீனா) வென்று கால் இறுதியில் நுழைந்தார்.

மற்றொரு 4-வது சுற்ற ஆட்டத்தில் முதல்நிலை வீராங்கனையான அமெய்லி மவுரஸ்மோ (பிரான்ஸ்) – செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) மோதினார்கள். இதில் மவுரஸ்மோ 6-4, 0-6, 6-2 என்ற கணக்கில் வென்றார்.

மற்ற ஆட்டங்களில் லிண்ட்சே டேவன்போர்ட் (அமெரிக்கா), ஜெலீனா (செர் பியா), குளோவன் (பிரான்ஸ்), எலீனா டெமன்டிவா (ரஷியா ஆகியோர் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

இரண்டாம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4-வது சுற்றில் ஜிரி நோவக்கை (செக் குடியரசு) எதிர்கொண்டார். இதில் நடால் 6-1, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

9-ம் நிலை வீரரான ஆண்டிரோட்டிக் (அமெரிக்கா) 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெஞ்சமின் பெக்கரை (ஜெர்மனி) தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் (இந்தியா), மார்ட்டின் டாம் (செக் குடியரசு) ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஆலிவர் (அமெரிக்கா) ஜார்க்கோ (பின் லாந்து) ஜோடியை வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தலைநகரில் தமிழர்களின் பாதுகாப்பு…-TMVP பிள்ளையான்
Next post திரிகோணமலை அருகே முக்கிய நகரை கைப்பற்றிவிட்டோம் -இலங்கை அறிவிப்பு