ஒருவருக்குக் கொட்டாவி வந்தால் அருகில் உள்ளவர்களுக்கும் கொட்டாவி வருவது ஏன்?..!!

Read Time:2 Minute, 36 Second

201706151353106079_If-someone-comes-to-yawn-nearest-person-affect_SECVPFஉடல் சோர்வு மற்றும் பசி நேரத்திலும், தூக்கம் வருவதற்கு முன்பும் கொட்டாவி வந்தால், உடலுக்கு நல்ல ஒய்வு தேவை என்று அர்த்தம். இதனை உணர்த்துவதற்கான ஓர் அறிகுறிதான் கொட்டாவி. குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தூக்கம், அசதியின் அறிகுறியே, கொட்டாவியாக வெளிப்படுகிறது.

வாய், நாக்கு, தசைகளை ரிலாக்ஸ் செய்திட கொட்டாவி உதவுகிறது. சலிப்பான சூழல் மற்றும் அலுப்பான சூழலில் அமர்ந்திருக்கும்போது, ஒருவர் கொட்டாவி விட்டால், அதே மனநிலையை கொண்டவருக்கும் மூளை அனிச்சையாக செயல்பட்டு, கொட்டாவியை வரவழைக்கிறது.

உதாரணத்திற்கு, பாடம் எடுப்பவர்களுக்கு கொட்டாவி வருவது இல்லை; அதை கவனிக்கும் மாணவர்களுக்கே அதிகம் கொட்டாவி வருகிறது.

கொட்டாவியின் செயல், ஆக்சிஜனை உள்ளிழுக்கும். கார்பன் டை ஆக்ஸைடை வெளியில் தள்ளும். இதைச் செய்ய நுரையீரலுக்கு மூளை ஆணையிடும்.

மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள இதய நோயாளி, பக்கவாத நோயாளிகளுக்கு கொட்டாவி வந்தால், அதை எச்சரிக்கை சமிக்ஞையாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். மூளைக்குச் செல்கிற ஆக்சிஜன் குறைந்துள்ளது என்பதை இது உணர்த்தும். இந்த நோயாளிகளை தனிக் கவனம் எடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கொட்டாவி ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி மட்டுமே. அடிக்கடி கொட்டாவி வந்தால், நல்ல ஓய்வு மற்றும் தூக்கம் தேவை.

ஒரு மணி நேரம் சிறிய தூக்கம் (Small nap) தூங்குவது நல்லது. சலிப்பான, பிடிக்காத சூழலிருந்து விலகிவிட்டாலே, கொட்டாவி வருவது நின்றுவிடும்.

தவிர்க்க முடியாத சூழலாக இருப்பின் முகத்தை நன்றாகக் கழுவி, புத்துணர்வு பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த மாதிரி நடிக்க ஆசைனு சொன்ன நடிகைக்கு என்ன நிலைமை தெரியுமா?..!!
Next post பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை..!!