தினமும் ஊறுகாய் சாப்பிடுவீர்களா? ஆபத்தை தெரிந்துகொள்ளுங்கள்..!!

Read Time:3 Minute, 12 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய்.

பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

செரிமான பிரச்சனைகள்

ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

அல்சர்

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம்

ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நீரிழிவு நோய்

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.

இதய நோய்

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

வயிற்றில் உப்புச உணர்வு

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அஜய்தேவ்கன் தான் காரணம்: தபு குற்றச்சாட்டு..!!
Next post மலேசியா சிறுமியை போல் துடிதுடிக்கும் மற்றுமொரு குழந்தை… பலவீனமானோர் பார்க்கத் தடை..!! (வீடியோ)