By 20 June 2017 0 Comments

மறதி நோயால் அவதிப்படும் அரவிந்த்சாமி..!!

625.111.560.350.160.300.053.800.200.160.90தனிஒருவன் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தி வருபவர் அரவிந்த் சாமி. சதுரங்க வேட்டை 2, வணங்கா முடி என நாயகனாக நடித்து வருகிறார்.

இதில் வணங்காமுடி படத்தை ஏற்கனவே அரவிந்த்சாமியை வைத்து புதையல் படத்தை எடுத்த செல்வா தான் இயக்கி வருகிறார்.

இவர் இப்படத்தை பற்றி கூறுகையில், யாருக்கும் தலை வணங்காத நேர்மையான போலீஸ் அதிகாரியின் கதை என்பதால் தான் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

முதல்பாதியில் சமூகவிரோதிகளை அதிரடியாக களையெடுக்கும் அரவிந்த்சாமி, ஒரு கட்டத்தில் எதிரிகளால் தாக்கப்பட்டு மெமரிலாஸ் ஏற்படுமாம்.

இதனையடுத்து இவரை கொல்ல துரத்தும் எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் அதிரடியான வேடத்தில் சிம்ரன் நடித்துள்ளாராம்.



Post a Comment

Protected by WP Anti Spam