அமெரிக்கா: மாணவர்களுடன் செக்ஸ்இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை

Read Time:5 Minute, 3 Second

usa-flag.gif12 வயது சிறுவர்களை தன்னுடன் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜையான இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் சர்வதேச மாண்டிசோரி பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 1969ம் ஆண்டு நிறுவினர். தற்போது இப்பள்ளியின் இயக்குனராக அவர்களது மகள் லீனா சின்ஹா இருந்து வருகிறார்.

40 வயதாகும் லீனா சின்ஹா, அந்தப் பள்ளியில் படித்த 12 மற்றும் 13 வயது மாணவர்களை மயக்கி, அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம், லீனா சின்ஹா மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, அவருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இந்த தண்டனையை லீனா சின்ஹா ஏற்றுக்கொள்ள அக்டோபர் 18ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. அதற்குள் சம்மதம் தெரிவிக்காவிட்டால் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று நீதிபதி கரோல் பெர்க்மேன் அறிவித்துள்ளார்.

முன்னதாக அரசுத் தரப்பில ஆஜரான மூத்த வழக்கறிஞரான புளோரன்ஸ் சாபின் வாதிடுகையில், லீனா சின்ஹா தனது குற்றத்தை ஒத்துக்கொண்டால் அவருக்கு அதிகபட்சம் 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கலாம் என்றார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், 6 ஆண்டு தண்டனையை அறிவித்துள்ளார் நீதிபதி.

லீனா சின்ஹா ஆசை வார்த்தை கூறி கட்டாயஉடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படும் இரு சிறுவர்களில் 13 வயதான சிறுவனுக்கு இப்போது 23 வயதாகிறது. அந்த இளைஞர் தற்போது அமெரிக்க காவல்துறையில் பணியாற்றிவருகிறார்.

அவருக்கு 13 வயதாக இருக்கும்போது லீனா சின்ஹா அவரை மயக்கி ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டுள்ளார். அதன் பிறகுஇருவரும் உடலுறவு வைத்துக் கொண்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பள்ளிக்கூட வேனுக்குள்ளும், அருகில் உள்ள வீடு ஒன்றிலும் சிறுவனுடன் சந்தோஷமாக இருந்ததாக லீனா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இன்னொரு சிறுவனுக்கு 12 வயதாகிறது. அந்த சிறுவனுடன் கடந்த 2001ம் ஆண்டிலிருந்து பலமுறை லீனா சின்ஹா உறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரசுத் தரப்பில் லீனா சின்ஹா மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள்: கற்பழிப்பு, மயக்குதல், சாட்சிக்கு பணம் கொடுத்து கலைக்கப் பார்த்தல், சாட்சியிடம் உடல்ரீதியிலான ஆதாரங்களை கலைக்க முயற்சித்தல், குழந்தையின் எதிர்காலத்தை சீரழித்தல், ஆள்மாறாட்ட குற்றச்சாட்டு, பொய்யான தகவலைக் கூறுதல் ஆகியவை.

மேலும், 1996ம் ஆண்டு¬முதல் பல வருடங்களுக்கு இரு மாணவர்களையும் லீனா சின்ஹா உடல்ரீதியாகதவறாக பயன்படுத்தியுள்ளார்.

வழக்கில் சிக்கிய பின்னர் அதிலிருந்து தப்ப தன்னால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவனுக்கு 400 டாலர் பணம் கொடுத்து சாட்சியத்தை மாற்றிக் கூறுமாறு கேட்டுக் கொண்டார் லீனா. அதுதவிர ஒரு செல்போனையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இத்தனையையும் மீறி தற்போது தண்டனையை பெற்றுள்ளார் லீனா.

பெற்றோர் இந்தியர்கள் என்றாலும் லீனா சின்ஹா நியூயார்க்கில்தான் பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். கடந்த 16 வருடங்களாக தனது பெற்றோர் நிறுவிய பள்ளியின் இயக்குனராகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிலந்தி (silanthi.net) என்னும் இணையத்தளம் ஊடாக பல மொழிகளிலும் செய்திகள்
Next post தேனீக்கள் தாக்கி 22 நாய்கள், எருது சாவு