ஸ்பைடர் 5 நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது: படக்குழுவினர் அதிர்ச்சி..!!

Read Time:1 Minute, 30 Second

201706201603410203_Mahesh-Babu-Spyder-5-minutes-scenes-leaked_SECVPFஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வரும் படம் ‘ஸ்பைடர்’. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஐந்தரை நிமிட காட்சி இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து உடனே தகவலறிந்த படக்குழுவினர் உடனடியாக சைபர் கிரைம் போலீசின் உதவியை நாடி, அந்த காட்சிகளை உடனடியாக இணையதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு இன்னும் முடியாத பட்சத்தில் ஐந்தரை நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக வெளியானது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. விரைவில், இப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இப்படி ஒரு மனைவி கிடைக்க குடுத்துவச்சிருக்கணும்! நடந்ததை நீங்களே பாருங்க..!! (வீடியோ)
Next post காசிமேட்டில் மனைவியை அடித்து கொன்ற மீனவர்..!!