By 23 June 2017 0 Comments

உலகத்திலேயே இந்த நாடுகள்ல தான் ஜோடி மாறாட்டம் ரொம்ப ஜாஸ்தியாம்..!!

sex-7-350x227பிரான்ஸ் நாட்டில் திருமணமான பெண்களிடையே, தங்கள் கணவர் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை படிப்படியாக குறைந்துவருவது சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஃபாப் கருத்துக்கணிப்பு நிறுவனம், புதிய வரவான டேலவ்.காம் இணையதளத்துடன் இணைந்து பெண்கள் அவர்களது கணவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை மற்றும் அவர்களை ஏமாற்றி வேறொரு ஆணுடன் வைத்துள்ள கள்ளத்தொடர்பு தொடர்பான கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது.

அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, திருமணமான பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர், உடலுறவுக்காக கணவரை மட்டும் சார்ந்திராமல் மற்றொரு ஆணுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இத்தகைய பெண்களின் விகிதம், 1970ம் ஆண்டில் 10 சதவீதம் இருந்ததாகவும், 2001ம் ஆண்டில் இவ்விகிதம் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கணவர் மேல் பற்று ஏற்படாதிருப்பதற்கு மற்ற ஆண்கள் சிறந்த கட்டுறுதியுடனும் ஆண்மைத்தன்மையுடன் இருப்பதாக 62 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனராம்.

கணவர் மீது அவநம்பிக்கையும், மற்ற ஆண்கள் மீது ஈர்ப்பும் ஏற்பட இணையதளங்களும் முக்கிய காரணியாக இருப்பதாக 42 சதவீத பெண்கள் தெரிவித்துள்ளனர்.

டியூரக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், கணவன் – மனைவி இடையே நம்பிக்கையின்மை அதிகமுள்ள நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், 56 சதவீதத்துடன் தாய்லாந்து முதல் இடத்திலும், 45 சதவீதத்துடன் டென்மார்க் இரண்டாம் இடத்திலும், 43 சதவீதத்துடன் பிரான்ஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

பிரிட்டன் 36 சதவீதத்துடன் இப்பட்டியலில் சற்று பின்தங்கியுள்ளது. நல்லவேளையாக இந்தியா முதல் இடத்துக்கான பட்டியலில் இல்லை என்பது நமக்கு ஆறுதல் தரும் விஷயம்.



Post a Comment

Protected by WP Anti Spam