வெளிநாடு செல்வோர்களின் கவனத்திற்கு..!!
வெளிநாடு செல்லும்போது நீங்கள் கொண்டு செல்லும் உடமைகள், ஆவணங்களுக்கு உரிய காப்பீட்டுப் பாதுகாப்புப் பெறுவது நல்லது.
பாஸ்போர்ட்டில் உங்கள் புகைப்படம், முகவரி உள்ள பக்கங்களை ‘ஜெராக்ஸ்’ எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் ‘விசா’வுக்கும் இது பொருந்தும்.
வெளிநாட்டில் உங்கள் பாஸ்போர்ட் தொலைந்து போக நேர்ந்தால், அங்கு உங்கள் நாட்டிற்கான தூதரகத்தை அணுகி ‘எமர்ஜென்சி பாஸ்போர்ட்’ பெற இது உதவும்.
அவசியமான பொருட்களை தவறாமல் எடுத்துச் செல்லுங்கள். உதாரணத்துக்கு, அவசர உதவி மருந்துப் பொருட்கள், சாதனங்கள் அடங்கிய ‘கிட்’.
கைவசம் உள்ள பணத்தையெல்லாம் ஒரே இடத்தில் வைக்காமல், பல்வேறு இடங்களில் பிரித்து வையுங்கள்.
வெளிநாட்டுக்குச் செல்லும்போது அதிகமான பணத்தை எடுத்துச் செல்ல வேண்டாம். Forex card போன்றவை எல்லா இடங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படும், செலவு பிரச்சனையைத் தீர்க்கும்.
வெளிநாடுகளில் சில வங்கிகள் மட்டுமே ‘Traveler’s cheque’ஏற்கின்றன என்பதால் அவற்றால் பெரிதாகப் பயனில்லை. தவிர, அவை தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அவதிதான்.
சரியாக விவரம் தெரியாமல் ‘ International Roaming ஆக்டிவேட் செய்யாதீர்கள். ஒரு பெரிய செல்போன் பில்லுடன் வெளிநாட்டில் இருந்து திரும்புவதைப் போல மோசம் எதுவுமில்லை.
உங்கள் செல்போன் சேவை நிறுவனத்துடன் தொடர்புகொண்டு, வெளிநாடுகளுக்கு என பிரத்தியேகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரியுங்கள் அல்லது இலவசமாக வழங்கப்படும் ‘ Wifi’ வசதியைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அதிகமான சுமையை சுமந்துசெல்லாதீர்கள். அது உங்கள் பயணத்தை கஷ்டமாக்கும். தவிர, நீங்கள் வெளிநாடுகளில் பொருட்கள் வாங்கக்கூடும் என்பதால் திரும்புகையில் சுமை அதிகரிக்கும் என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.
விலை உயர்ந்த நகைகளை அணிந்துசெல்வதையோ, எடுத்துச்செல்வதையோ தவிர்க்க வேண்டும். அவை தொலைந்துபோனாலோ, திருட்டுப் போனாலோ திரும்ப பெற்றுக்கொள்வதில் அதிகம் சிரமம் மட்டுமல்லாமல் அவைகள் சில நேரத்தில் கிடைக்காமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.
Average Rating