இந்த வார்த்தையை மட்டும் உங்க மனைவிக்கிட்ட சொல்லிப்பாருங்க… அப்புறம் அசந்துடுவீங்க?..!!
காதலிக்க ஆரம்பித்த சில நாட்கள் நொடிக்கு நொடி ஐ லவ் யூ சொல்லி இருப்பீர்கள். ஆனால் இப்போதும் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறீர்களா? உங்கள் மனதில் காதல் இருக்கலாம். அதே சமயம் அதை வெளிப்படுத்த வேண்டியதும் அவசியம்.
ஐ லவ் யூ தானே சொல்ல வேண்டும் சொல்லிட்டா போச்சுனு தினமும் ஒரு காபி வேணும்னு சொல்லற மாதிரி ஐ லவ் யூ சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் ஐ லவ் யூ வை உணர்ந்து சொல்லுங்கள். எதற்காக அவரை பிடிக்கும் என்பதையும் சொல்லுங்கள். உங்கள் துணை உங்களுக்காக தினமும் பல வேலைகளை செய்து கொடுப்பார்.
அது அவரது கடமை என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அவர்க்கு சின்னதா ஒரு தேங்ஸ் சொல்லுங்க. அவர் சந்தோஷத்தில் களைப்பு தெரியாமல் வேலை செய்ய முடியும்.
இந்த கேள்வியை பெரும்பாலான கணவர்கள் கேட்பதே இல்லையாம். ஆபிஸ் வேலையை பாக்கவே நேரம் இல்லை. இனி வீட்டு வேலைகளை வேற செய்யனுமா? என்று நினைத்துக்கொள்கிறார்கள். உங்கள் மனைவிக்கு ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டு உதவுங்கள்.
புகழ்ச்சி பிடிக்காது என சொன்னாலும், வெளித்தோற்றத்தை புகழ்ந்தால் அனைவருக்கும் பிடிக்க தான் செய்யும். எனவே நீங்கள் உங்கள் துணையின் அழகை வர்ணித்து கவிதை எழுதாவிட்டாலும், குறைந்தது அழகா இருக்கனு மட்டுமாவது சொல்லலாம்.
உங்கள் துணையிடம் ஏராளமான குறைகள் இருக்கலாம். குறைந்தது ஒரு நிறை கூடாவா இருக்காது அதை பற்றி அவரிடம் பேசுங்கள். அது அவருக்கு ஊக்கமளிக்கும். புத்துணர்ச்சியை கொடுக்கும். அவரை குஷிபடுத்தும். அது தானே உங்கள் தேவை…?
Average Rating