அப்பா ஆகப்போகும் ஆண்களுக்கு மட்டும்..!!
தாய்மை அடையப் போகும் பெண்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, அப்பா ஆகப்போகும் ஆண்களுக்கு உள்ள மகிழ்ச்சி இரட்டிப்பாகவே இருக்கும்.
அதே நேரத்தில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை, நன்றாக கவனித்துக் கொள்வதுடன், அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது கணவனின் முக்கிய கடமையாகும்.
ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
ஆண்களில் பல பேர்களுக்கு கர்ப்பக்காலம் பற்றி தெரியாது. எனவே அதற்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, பிரசவம் தொடர்பான புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
பிரசவ காலத்தை நெருங்கும் பெண்களுக்கு எந்த நேரத்திலும் பிரசவ வலி உண்டாகலாம். எனவே அவர்களின் அருகில் இல்லையெனில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவாறு இருக்க வேண்டும்.
மருத்துவர் கூறிய திகதியில் சரியாக நேரத்தில் மறக்காமல் தனது மனைவியை மருத்துவமனை பரிசோதனைக்கு அழைத்து செல்வதுடன், மருத்துவர்களிடன் சந்தேகங்களை கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பக் காலத்தில் உள்ள மனைவியை ஷாப்பிங் அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்ததாகவும், அணிந்துக் கொள்வதற்கு வசதியாக இருக்க கூடிய ஆடைகளை வாங்கி கொடுக்க வேண்டும்.
கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது மிக அவசியம் என்பதால், அவர்கள் விரும்பும் அனைத்தையும் செய்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.
மனைவியின் கர்ப்ப காலம் தொடங்கி, குழந்தை பிறப்பு வரையிலான ஏற்படும் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள், வலிகள், மகிழ்ச்சிகள் ஆகியவை குறித்து, ஒரு புத்தகமாக எழுதி, அதை குழந்தை பிறந்தவுடன் மனைவிக்கு பரிசாகக் கொடுக்கலாம்
Average Rating