தோழிகளே…வீட்டிலேயே இயற்கையாக லிப்ஸ்டிக் தயாரிக்கலாம் உங்களுக்கு தெரியுமா?..!!

Read Time:2 Minute, 42 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா?

இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக சுலபம். அதன் பலனோ அட்டகாசம்.

தேவையான பொருள்கள்

பீட்ரூட் –1

தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்

தேன் மெழுகு – 4 ஸ்பூன்.

செய்முறை

முதலில் பீட்ரூட்டை எடுத்து தோலை சீவி நன்றாக துருவி அதன் சாறினை வடிகட்டி கொள்ளுங்கள்.

பின்பு, வடிகட்டிய சாறினை நல்ல சுத்தமான சிறிய கண்டெயினரில் எடுத்துக் கொண்டு அதனுடன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக ஒரு ஸ்பூனைக் கொண்டு கலக்கி அதை அப்படியே பிரிட்ஜில் வைத்து விடவும்.

இந்த கலவையானது ஓரிரு நாட்களில் நன்ராக உறைந்து விடும்.

பின் தேவைப்படும்போது அதனை உங்கள் உதட்டில் போட்டுக் கொள்ளலாம். உதட்டில் காய்ந்தவுடன், உதடு சிவந்து மினுமினுப்பாக தெரியும்.
குறிப்பு:

பீட்ரூட் அடர்ந்த கலர் தருவது போல் லைட்டான சிவப்பு நிறம் தேவையெனில் நீங்கள் மாதுளம் பழச் சாறினை எடுத்தும் இதே போல் செய்யலாம். அது லைட் கலர் ஷேட்டில் அழகாக இருக்கும்.

இதே போலவே இந்த பீட்ரூட், தேன்மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் அருமையான ஸ்க்ரப் தயார்.

இயற்கையானவை அனைத்துமே உங்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்யும். பாதுகாப்பானவைக் கூட. கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளைப் பதம் பார்க்கும்.

ஆனால், இந்த இயற்கையான லிப்ஸ்டிக்கை தினமும் உபயோகப்படுத்தினால், உங்கள் உதடும் அதே நிறத்தில் மாறி ,தோற்றத்தை அழகாக்கி, உங்களை மிளிரச் செய்யும்.

இதை உபயோகித்து, பயன் பெறுங்கள் தோழிகளே!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த ஆம்பளைங்களே இப்படித்தாம்ப்பா…!!
Next post சுற்றுலா வந்த வெளிமாநில பெண்ணை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த ஆட்டோ டிரைவர்..!!