நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஓட்ஸ் புட்டு..!! (வீடியோ)
சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி ஓட்ஸ் உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.
ஓட்ஸ் மூலம் புட்டு செய்து காலை உணவாக சாப்பிடலாம், இது உடல் எடையை குறைப்பவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – 100 கிராம்,
உப்பு – 1 சிட்டிகை,
தேங்காய்த்துருவல் – 50 கிராம்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
பொடித்த முந்திரி – 7,
ஏலக்காய்த்தூள் – 1 சிட்டிகை,
உலர்ந்த திராட்சை – சிறிது,
நாட்டுச்சர்க்கரை – 100 கிராம்,
சூடான பால் – 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை
ஓட்ஸுடன் பால் சேர்த்து உதிரியாக பிசைந்து கொள்ளவும். இட்லி பாத்திர தட்டில் ஓட்ஸை போட்டு 15 நிமிடங்கள் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து, தேங்காய்த்துருவல், உப்பு, ஏலக்காய்த்தூள், நாட்டுச்சர்க்கரையை சேர்த்து பிரட்டவும்.
அடுத்து அதில் வெந்த ஓட்ஸை சேர்த்து அனைத்தும் ஒன்றாக சேர்ந்து கலந்து வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும்.
Average Rating