தனுஷூக்கு நல்ல மனைவியாக இருப்பேன்… சர்ச்சையை கிளப்பிய அமலாபால்..!!
தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘vip 2′ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனுஷூக்கு நல்ல மனைவியாக நான் இருப்பேன்’ என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமலாபால்.
அமலாபால் தனது கணவர் இயக்குனர் விஜய்யிடம் இருந்து பிரிந்து சென்றதற்கு காரணம் தனுஷ் என்று கூறிவரும் நிலையில் VIP இரண்டாம் பாகத்திலும் தனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு தனுஷிற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
வேலையில்லா பட்டாதாரி 2ம் பாகத்தில் தனுஷிற்கு தொல்லை கொடுக்கும் மனைவியாக நடித்துள்ளேன். ஆனால் ‘vip 3′-ம் பாகம் உருவானால் அதில் கண்டிப்பாக அவருக்கு நல்ல மனைவியாக நடிப்பேன்’ என்று கூறியுள்ளார்.
இதன் பின்பு VIP 3ம் பாகமும் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தனுஷ் மீது அமலாபாலுக்கு உள்ள ஈர்ப்பை மறைமுகமாக அவர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Average Rating