500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகள்.. அலைமோதும் கூட்டம்.. எங்கே என்று தெரியுமா??..!! (வீடியோ)

Read Time:2 Minute, 49 Second

ubm_hotel001.w245அன்றாடம் அலைந்து திரிந்து உழைப்பது எதற்காக என்று பார்த்தால் மூன்று வேளை உணவிற்காக தான். இதில் சாப்பாட்டு பிரியர்கள் என்று பலர் உள்ளனர் அவர்கள் எந்த நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். அதிலும் அசைவம் என்றால் போதும் வெளுத்து கட்டுவார்கள்.

பெரும்பாலும் உணவகத்தில் சமைக்கும் அசைவ உணவுகள் நம் வீட்டில் சாப்பிடுவது போல வராது. ஆனால் ஈரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் சமைக்கும் அசைவ உணவுகள் நம் வீட்டில் சாப்பிடும் சுவையை அளிக்கிறது என்கிறார்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்கள். அந்த உணவகத்தை பற்றி இனி காணலாம்.

யூபிஎம் உணவகம்

யூபிஎம் உணவகத்தைப் பொருத்த வரை அசைவ உணவு தான் சிறப்பு. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் இங்கு குறிப்பிட்ட அளவு சாப்பாடு தினமும் தயார் செய்யப்படுகின்றது.ஒரே நேரத்தில் 50 நபர்கள் இங்கு அமர்ந்துகொண்டு உணவு உன்னக்கூடிய அளவிற்கான கூறைப் போட்ட இடம் தான் இருக்கும். உணவகத்தில் தொழிலாளர்கள் என்றால் உரிமையாளர் கருணைவேல்(61) மற்றும் ஸ்வர்னலக்‌ஷ்மி (53) இருவர் மட்டுமே.

வார நாட்களில் 50 நபர்கள் வரையும், வார இறுதி நாட்களில் 150 நபர்கள் வரையும் இங்குச் சாப்பிட வருகின்றார்கள்

அசைவ சாப்பாட்டு வகை

அசைவ சாப்பாட்டில் ஆட்டுக்கறி குழம்பு, ரத்தப் பொரியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல் கறி, பிராய்லர் கோழி கறி, நாட்டுக் கோழிக் கறி, மீன் குழம்பு, சாதம், ரசம், தயிர் போன்ற வகைகள் இருக்கும்.குழந்தைகளுக்காகச் சிறப்பு சிக்கன் குழம்பில் பருப்பு போன்றவற்றுடன் காரம் குறைவாகவும் உணவு தயாற் செய்கிறார்கள்.

திருமண பந்தி போல விருந்து

திருமண விழாக்களில் உணவு பரிமாறப்படுவது போல 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து உணவைச் சாப்பிடும் போது கலகலப்பாகவும் விருந்து நடக்கின்றது. அது மட்டும் இல்லாமல் 20 பேர் தங்களது வீட்டிற்குள் அமர்ந்து உணவு சாப்பிடவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஷால் பேச்சால் தடைபட்ட சூர்யா படத்தின் படப்பிடிப்பு..!!
Next post முதன் முறையாக தன் மகள்களை தொலைக்காட்சிக்கு காட்டிய பிரகாஷ்ராஜ்..!!