By 2 July 2017 0 Comments

மொட்டையடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல ஹிரோயின்..!!

625.111.560.350.160.300.053.800.200.160.90 (1)தமிழ் சினிமாவில் இப்போது நடிகைகளின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. மார்க்கெட்டை தக்கவைத்துகொள்ள பலரும் போராட வேண்டியிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ள பூர்ணாவுக்கு தற்போது ஹீரோயின் சான்ஸ் பெரிதளவில் கிடைப்பதில்லை.

இதனால் சில படங்களில் முக்கிய கேரக்டர்களில் தலை காட்டும் இவர் சசிகுமார் நடிக்கும் கொடிவீரன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக மகிமா நம்பியார் நடிக்கிறார்.

கொம்பன் முத்தையா இயக்கும் இப்படத்தில் முக்கிய கேரக்டருக்காக ரியலாகவே மொட்டை அடித்துள்ளாராம் பூர்ணா. இப்போதிருக்கும் கதாநாயகிகள் யாரும் இதை செய்ய முன்வராத நிலையில் பூர்ணா இப்படி செய்திருப்பது ஆச்சர்யமே.

தற்போது இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது.



Post a Comment

Protected by WP Anti Spam