சென்னை கல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயன்ற காதலன் கைது..!!

Read Time:3 Minute, 42 Second

201707051600352460_Panruti-near-lover-arrest-for-Chennai-college-student-murder_SECVPFகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே கடந்த 1-ந்தேதி காலையில் 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்காக போராடி கொண்டிருந்தார்.

அந்த வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சந்திரசேகரன் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சென்னை கொளத்தூரை சேர்ந்த சக்தி என்பதும், அங்குள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி (23) என்ற வாலிபரை பேஸ்புக் மூலம் காதலித்து வந்ததும் தெரிந்தது. சக்தியும், முரளியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காரில் மதுரை, தஞ்சை உள்பட பல இடங்களுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சாலையோர கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்பு அவர்கள் சந்தோ‌ஷமாக இருந்தனர். பின்னர் நம் குடும்பத்தினர் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்கொலை செய்து கொள்வோம் என்று சக்தியிடம் முரளி கூறினார். சக்தியை ஏமாற்றி அவரை கொலை செய்ய முரளி திட்டமிட்டார்.

பின்னர் அங்குள்ள முந்திரி தோப்புக்கு சக்தியை அழைத்து சென்று அவரது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு முரளி காரில் ஏறி தப்பி ஓடி விட்டார்.

தப்பி ஓடிய முரளியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சேலம், கிருஷ்ணகிரி, கடலூர் போன்ற தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முரளி கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் இருப்பது பேலீசாருக்கு தெரிய வந்தது. இன்று காலை அங்கு விரைந்து சென்று முரளியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் அங்கு செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட முரளியை தனிப்படை போலீசார் கடலூருக்கு அழைத்து வருகிறார்கள்.

மாணவியை எரித்து கொல்ல முயன்ற காதலனை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டி உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யின் மெர்சல் படப்பிடிப்பில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட பலத்த காயம்..!!
Next post ஹாலிவுட்டில் கால்பதித்த ஏ.ஆர். ரகுமானின் தங்கை..!!