ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் செய்த முகம்சுழிக்க வைக்கும் காரியம்.. வைரலான காட்சி..!!

Read Time:2 Minute, 37 Second

bus_kissing001.w245ஓடும் பேருந்தில் பாஜக பிரமுகர் இளம் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாஜக பிரமுகர் முத்தம் கொடுக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் பாஜக நிர்வாகி ரவிந்திர பவந்தடே. இவர் சந்திராபூர் கடந்த 27ஆம் தேதி பகுதியில் பேருந்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பேருந்தில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார். அந்த பெண்ணுக்கு பலவந்தமாக பேருந்துதில் முத்தம் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் கூறிய அவர் அதற்கு அந்தப் பெண் தன்னுடன் வரவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளார். இந்தக்காட்சிகள் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பாஜக பிரமுகரின் இந்த செயலால் மனமுடைந்த அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாருக்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளையும் அந்த பெண் வழங்கியுள்ளார்.

ஆனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆளும் கட்சியாக இருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியதை தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பின்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கட்சி கூட்டங்களில் எதிலும் பங்கேற்காத காரணத்தால் அவரை கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக பாஜக தலைவர் அஷோக் நேட் பவந்தடே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினிமாவுக்காக அஜித் இதை ஒப்புக் கொள்வாரா- விவேகம் படம் எப்படி வரப்போகிறது..!!
Next post BiggBoss நிகழ்ச்சியை பார்க்காமல் இருக்க முடியவில்லை- பிரபல தொகுப்பாளினி..!!