கழுத்தில் உண்டாகும் கருமையை போக்கும் இயற்கை வழிகள்..!!

Read Time:2 Minute, 24 Second

201707061139532883_Natural-ways-to-women-dark-on-the-neck_SECVPFசிலருக்கு உடல் முகம் அனைத்தும் ஒரே நிறம் இருக்கும். ஆனால் கழுத்து மட்டும் கருப்பாக இருக்கும். அதுவும் குறிப்பிட்டு சொன்னால் கழுத்தின் பின்பகுதி மிகவும் கருமையாக மாறிவிடும்.

அதுதவிர்த்து ஹார்மோன் மாற்றங்களாலும் கழுத்தில் கருமை ஏற்படும். இதனை போக்குவதற்கு எளிய மற்றும் உண்மையில் பயனளிக்கக் கூடிய குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

* பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தினமும் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

* கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

* முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

* பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் படிப்படியாக மறையும்.

* சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் செயல்திறனை அதிகரிக்க சூப்பரான 7 டிப்ஸ்..!!
Next post பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய மேஜை நாகரிகம்..!!