தல அஜித்தின் ஆக்ரோஷம்: அனல் பறக்கும் தலை விடுதலை பாடல்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 25 Second

ajith_vivegam.w245தல அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்தின் ஆடியோ சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை அந்த பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் அஜித் ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் புல்லரிக்க வைப்பதாக அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோ பாடல் வெளியாகிய சில நிமிடங்களில் 4 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் யூடியூபில் பெற்றுள்ளது.

அனிருத் இசையில், சிறுத்தை சிவா பாடல் வரிகளில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் இப்போதைக்கு அஜித் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக கருதப்படுகிறது. அனல் பறக்கும் இந்த வீடியோ பாடல் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பித்தப்பையில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை முறைகள்..!!
Next post குளிக்கும் பொழுது சிறுநீர் கழிப்பவரா நீங்கள்?.. இந்த ஆச்சரியம் தெரியுமா உங்களுக்கு…!!!