ஜப்பான் மன்னர் குடும்பத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஆண் வாரிசு

Read Time:3 Minute, 19 Second

Japan.Flag.jpgஜப்பான் இளவரசரின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மன்னர் குடும்பத்தில் 40 ஆண்டுகளாக எதிர் நோக்கி இருந்த ஆண் வாரிசு சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஜப்பான் நாட்டு மன்னர் குடும்பத்தின் மீது அந்நாட்டு மக்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர். மன்னர் குடும்பத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்கவில்லை. அது பெரும் மனக்குறையாக இருந்து வந்தது.

மன்னரின் மூத்த மகனும் பட்டத்து இளவரசருமான நகுஹிட்டோ-இளவரசி மசாக்கோவுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இளைய இளவரசர் அகிஷினோவின் மனைவி கிகோ. இவர்களுக்கும் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஜப்பான் நாட்டு சட்டப்படி மன்னர் குடும்பத்தில் பிறக்கும் ஆண் குழந்தை தான் மன்னரின் வாரிசாக முடியும். இதனால் ஆண் வாரிசு இல்லையே என்று வருத்தம் நிலவியது. ஆண் வாரிசு பிறக்க வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்தனர். இதற்கிடையில் பெண் குழந்தைகளும் வாரிசு ஆகலாம் என சட்டத்தை திருத்த முடியுமா? என்று ஆலோசிக்கப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

ஆண் குழந்தை பிறந்தது

இந்த நிலையில் இளைய இளவரசர் அகிஷினோவின் மனைவியான 39 வயதான இளவரசி கிகோ நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிசேரியன் ஆபரேஷன் மூலம் பிறந்த அந்த குழந்தை 2.6 கிலோ எடை இருக்கிறது. குழந்தையும், தாயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஜப்பான் அரச குடும்பத்தில் 1965-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 40 ஆண்டுக்கு பின் அரச குடும்பத்தில் ஆண் குழந்தை பிறந்திருப்பதால் அரச குடும்பத்தினரும், ஜப்பான் நாட்டு மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த செய்தியை அறிந்ததும் மக்கள் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

வாரிசு கிடைத்தது

தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தை தான் இனி மன்னரின் வாரிசாக முடியும். எனவே வாரிசு சர்ச்சை முடிவுக்கு வந்து விட்டது. இளவரசர் அகிஷினோ-கிகோ தம்பதிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று ஏற்கனவே ஜோதிடர்கள் கூறியிருந்தனர். அந்த வாக்கு இப்போது பலித்து இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஜனாதிபதி மஹிந்த அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு
Next post கவர்ச்சி உடை அழகிப்போட்டியில் பாகிஸ்தான் பெண் சாதனை