சருமத்தின் நிறத்தினை மாற்றும் டீ: இப்படி பயன்படுத்துங்கள்..!!
சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள் நம் சரும செல்களை பாதிப்பதால், சருமத்தின் நிறம் மாறுவதுடன் பல சரும பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
எனவே இயற்கையான வழிமுறையில் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாமல் சரும பிரச்சனைகளை போக்க டீயை பயன்படுத்தலாம்.. எப்படி?
சரும பிரச்சனைக்கு டீ பயன்படுவது எப்படி?
டீயில் உள்ள டேனிக் ஆசிட், நம் சரும செல்களை மென்மையாக்கி, சரும நிறம் மாறாமல் தடுக்க உதவுகிறது.
டீயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
டீ பையை சூடான நீரில் ஊறவைத்து அறை வெப்ப நிலையில் குளிர வைத்து, ஒரு துணியை அதில் நனைத்து, சருமத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
டீ பையை பயன்படுத்தியப் பின் அதை குளிர வைத்து, அந்த பையை பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் தேய்த்து 20 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
சருமம் பிரச்சனையை போக்க டீ குளியல் கூட எடுக்கலாம். அதற்கு சிறிது டீ பையை குளிக்கும் நீரில் போட்டு, 20 நிமிடம் ஊறவைத்து, பின் அதை எடுத்து விட்டு குளிக்க வேண்டும்.
ப்ளாக் டீ கூட பழுப்பு நிற சருமத்தைப் போக்கும். அதிலும் சாமந்தி பூ டீ சூரியக் கதிர்களின் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைத்து, சருமத்தின் நிறம் மாறாமல் தடுக்க உதவுகிறது.
டீ பையை பாலில் கலந்து, பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி வந்தால், சரும நிறம் மாற்றம் அடைவதை தடுக்கலாம்.
Average Rating