30 நொடியில் உயிரிழந்த பெண்… நேரலையில் வெளியிடப்பட்ட காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 51 Second

accident_girl001.w245காரில் தனது தோழியுடன் விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிவேகமாக பயணித்த பெண் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Czech Republic நாட்டை சேர்ந்தவர் Nikol Barabasova. இளம் பெண்ணான இவர் தனது தோழி ஒருவருடன் காரில் Obrnice கிராமத்தில் உள்ள சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். காரை Nikolன் தோழி 120 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் இயக்கி சென்றுள்ளார். இருவரும் விபத்து ஏற்படுத்தி மரணிக்கும் நோக்கில் இந்த வேகத்தில் சென்றுள்ளனர்.

காரில் உட்கார்ந்து சிரித்தபடியே Nikol கார் வேகமாக செல்லும் காட்சியை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து பேஸ்புக் நேரலையில் அதை பதிவேற்றியுள்ளார். 30 நொடிகள் ஓட கூடிய அந்த வீடியோவின் முடிவில், கார் நிலைதடுமாறி எங்கோ மோதுவது போல காட்சிகள் உள்ளது. அப்போது, Nikol பயத்தில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த விபத்தில் Nikol உயிரிழந்து விட்டதாகவும், காரை ஓட்டிய அவர் தோழி ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. பொலிசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய், அஜித் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் அங்கீகாரம்..!!
Next post ரூ.50 லட்சம் செக் மோசடி: டி.வி. நடிகைக்கு 2 ஆண்டு ஜெயில்..!!