இந்த தழும்புகள் உங்களுக்கு இருக்கா?… எப்படி சரிசெய்யலாம்?..!!

Read Time:2 Minute, 9 Second

201707111614162290_how-to-get-rid-stretch-marks-for-women_SECVPF-400x300கருத்தரித்தல், உடல் எடை அதிகரித்தல், ஜிம் பயிற்சி செய்தல் போன்ற காரணங்களால், சருமமானது திடீரென்று விரிந்து சுருங்கும் போது, அது தழும்புகளாக மாறிவிடுகிறது.

கிராமங்களில் பொதுவாக இதை பிரசவத் தழும்புகள் என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய சருமத்தோல் சுருங்கி விரிவதால் உண்டாகக்கூடிய தழும்புகள் தான் இது.

இது மறையாமல் அப்படியே இருப்பது நம்முடைய சரும அழகையு கெடுத்துவிடுகிறது. இதனாலேயே பல பெண்கள் சேலை உடுத்தத் தயங்குகிறார்கள்.

எப்படி இந்த தழும்புகளை விரைவில் மறையச் செய்வது?

ரோஸ்மேரி ஆயிலை பாதாம் எண்ணெயுடன் கலந்து, தினமும் ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி, 15-20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், தழும்பானது மறையும்.

ஆலிவ் ஆயிலைக் கொண்டு, தினமும் தழும்புகள் உள்ள இடத்தில், மசாஜ் செய்து வந்தால், தழும்புகள் விரைவில் நீங்கும்.

பாதாம் எண்ணெயை, ஆலிவ் ஆயில் மற்றும் கோதுமை எண்ணெயுடன் கலந்து, இரவில் படுக்கும் முன் மசாஜ் செய்ய வேண்டும்.

கோதுமை எண்ணெயுடன், சிறிது ரோஸ் எண்ணெய் கலந்து, மசாஜ் செய்ய வேண்டும். இதை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

லாவண்டர் எண்ணெயுடன், ஆலிவ் ஆயில் கலந்து, தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி, 20 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், அசிங்கமாக உள்ள தழும்புகளை போக்கலாம்.

இவற்றில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து செய்து வந்தால் இடுப்பில் உள்ள தழும்புகள் விரைவில் மறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுய இன்பம் சரியா?… தவறா?…!!
Next post என்னோடு உடலுறவு வைத்துக்கொண்டால் மோட்சம் கிட்டும்: யோகா குருவின் காம வெறியாட்டம்..!!