ஐந்து ஆண்டுகளின் பின்னர் முதலிடத்தை இழந்தது “கங்னம் ஸ்டைல்” பாடல்..!! (வீடியோ)

Read Time:3 Minute, 13 Second

kpop-9தென் கொரிய பாடகர் சை பாடிய மிகப்பிரபலமான “கங்னம் ஸ்டைல்” பாடல், யூடியூபில் அதிக பார்வைகளைக் கொண்ட பாடல் என்ற பெருமையை ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இழந்துள்ளது.

பொதுவாக யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படும் ஒரு வீடியோ, அதிகபட்சமாக 2,14,74,83,647 பார்வைகளைப் பெற முடியும் அளவுக்குத்தான் அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், “கங்னம் ஸ்டைல்” பாடலுக்கான பார்வைகள் அந்த எண்ணிக்கையையும் தாண்டிச் சென்றதால், வேறு வழியின்றி யூடியூப் நிறுவனம் தனது கட்டமைப்பை அதிக எண்ணிக்கையில் பார்வைகள் பெறும் வகையில் மேம்படுத்தியது.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த இந்தப் பாடலின் சாதனையை விஸ் கலீஃபா மற்றும் சார்லி புத் இணைந்து உருவாக்கிய “சீ யூ எகைன்” என்ற பாடல் வீடியோ தற்போது முறியடித்துள்ளது.

இதயத்தைப் பிழியும் இந்தப் பாடல், தற்போது வரை 2,895,373,709 பார்வைகளைப் பெற்று, கங்னம் ஸ்டைல் பாடல் செய்திருந்த சாதனையை முறியடித்துள்ளது.

யூடியூப் தளத்தில் “சீ யூ எகைன்” பாடல் பார்க்கப்பட்ட நேரத்தைக் கணக்கிட்டால், அது 21,759 ஆண்டுகளுக்கு சமமாகும்.

இந்த பாடல், ஹொலிவுட் அதிரடி திரைப்படமான “தி ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்-7” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடித்திருந்த, படம் வெளியாகும் முன்னரே கார் விபத்தில் பலியான நடிகர் பால் வாக்கருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்பனையான பாடல் என்ற சாதனையையும் “சீ யூ எகைன்” படைத்திருந்தது.

இந்த பாடல் யூடியூப் தளத்தில் வெளியான ஆறு மாதங்களில் 1 பில்லியன் பார்வைகளைக் கடந்தது.

ஆய்வுகளின்படி, யூடியூபில் அதிகம் பார்க்கப்படும் முதல் 50 வீடியோக்களில், 47 வீடியோக்கள் இசை வீடியோக்களாக இருக்கின்றன.

துல்லியமாகக் கணக்கிட்டால், “சீ யூ எகைன்” பாடல் யூடியூபில் பெற்றுள்ள பார்வைகளுக்காக, விஸ் கலீஃபா மற்றும் சார்லி புத் ஆகியோருக்கு யூடியூப் நிறுவனம் 2.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த பாட்டிக்கு TrEAt வேணுமாம் யாரு ரெடி இருக்கீங்க ??..!! (வீடியோ)
Next post டுவிட்டரில் சமந்தாவை தொடரும் 40 லட்சம் பேர்..!!