5 வயது சிறுமிக்கு அபராதம் விதித்த அதிகாரி – எதற்கு தெரியுமா?..!!

Read Time:2 Minute, 36 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானிய நாட்டில் 5 வயது சிறுமிக்கு 150 பவுண்ட் அபராதம் விதித்த காரணத்திற்காக நகராட்சி அதிகாரிகள் சிறுமியின் தந்தையிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.

கிழக்கு லண்டனில் அமைந்துள்ள Mile End பகுதியில் 5 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நகரில் வார இறுதி நாளில் நடைபெற்ற Lovebox என்ற விழா மிகவும் பிரபலம் என்பதால் இதில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சென்றுள்ளனர்.

சிறுமியின் வீடு வழியாக இளைஞர்கள் சென்றதால் அவர்களுக்கு உதவும் வகையில் சிறுமி ஒரு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு வெளியே மேசையை அமைத்து அதில் எலுமிச்சை பானத்தை தயார் செய்து சிறிய தொகைக்காக விற்பனை செய்துள்ளார்.

பலரும் பானத்தை வாங்கி குடித்து விட்டு சென்றுள்ளனர். சிறுமியின் நடவடிக்கை தொடர்பான தகவல் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை பெற்ற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். சிறுமியிடம் வியாபரம் நடத்த தேவையான உரிமம் இல்லாததால் சிறுமிக்கு 150 பவுண்ட் அபராதம் விதிக்கும் ரசீதை கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

இதுக் குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தனது மகள் மிகவும் வருத்தப்பட்டு அழுததாக தெரிவித்துள்ளார்.

சிறுமிக்கு அபராதம் விதிக்கப்பட்ட தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சிறுமிக்கும் அவருடைய தந்தைக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், ‘அதிகாரிகள் தவறாக நடந்துக்கொண்டதற்காக மன்னிப்பு கோருவதாகவும், சிறுமிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை உடனடியாக ரத்து செய்வதாக’ அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்..!!
Next post மீண்டும் மெரினாவில் போராட்டம் ஓவியாவிற்காக கூடிய மக்களும் பிரபலங்களும்..!!