கண்ணில்பட்ட எதையும் அள்ளி விழுங்கும் அகோரப் பசியால் தவிக்கும் சிறுவன்..!!

Read Time:1 Minute, 56 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (1)பேப்பர்களை கிழித்து சாப்பிடும் அளவிற்கு அடங்காத பசியால் தவிக்கும் விநோத நோயினால் ஒரு சிறுவன் அவதிப்பட்டு வருகிறான்.

தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சோலா என்பவருடைய மகன் காடென் பெஞ்சமின். பத்து வயதே நிரம்பிய இச்சிறுவன் பிராடர்-வில்லி சிண்ட்ரோம் என்ற அகோரப் பசி ஏற்படுத்தும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளான்.

அதீதப் பசியை தாங்க முடியாமல் கண்ணில் படும் காகிதங்களை எல்லாம் சாப்பிடும் நிலையில் அந்தச் சிறுவன் அவதிப்பட்டு வருகிறான்.

அதிகமாக சாப்பிடுவதால் பத்து வயதான அவனது எடை 90 கிலோ வரை சென்றுவிட்டது. இதனால், மூச்சுக்கூட விடமுடியாத நிலையில் ஏற்பட்டு செயற்கை சுவாச கருவி மூலம் சுவாசிக்கிறான்.

சாப்பிட எதுவும் கிடைக்காத நேரத்தில் தரையில் கிடக்கும் மரத்துண்டுகளை கூட சாப்பிட்டு விடுவதாகவும் என்றும் இந்நோயினால் மற்றவர்களைப் போல தன்னால் இருக்க முடியவில்லை என்று மன உளைச்சளுக்கு ஆளாகிவிட்டதாகவும் அந்தச் சிறுவனின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.

காடெனுக்கு மரபணு கோளாறு காரணமாக இந்த நோய் ஏற்பட்டிருக்கலாம் என்றும் இந்த நோய்க்கு இதுவரை மருந்துகளே கண்டுபிடிக்கபடவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு வங்காளத்தில் திருநங்கைக்கு நீதிபதி பதவி..!!
Next post ஜுலியின் முகத் திரையை கிழித்த கமல் ! ஓவியாவின் நேர்மைக்கு கிடைத்த மற்றும் ஒரு பரிசு..!! (வீடியோ)