அனுபவித்த வலிகள் போதும்: அமைதியாக உயிரை விட்ட சிறுவன்..!! (வீடியோ)
இதய நோய் காரணமாக 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் Mike. இவர் மனைவி Erica Schultz . இவர்களுக்கு Lexi என்ற மகளும் Ari Schultz (5) என்ற மகனும் உள்ளனர்.
Ari-க்கு பிறக்கும் போதே இதயத்தில் பிரச்சனை இருந்துள்ளது. அதாவது, அவனின் இதயத்தில் இடது பகுதி சரியாக வளர்ச்சியடையவில்லை.
இதன் காரணமாக தொடர்ந்து உடல் நல கோளாறு Ari-க்கு ஏற்பட்டுள்ளது. இதுவரை அவனுக்கு 3 முறை ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது.
இதோடு இரண்டு வாரம் கோமா நிலையிலும் சிறுவன் Ari இருந்துள்ளான். தங்களது மகனின் நிலை குறித்து Erica மற்றும் Mike ஆகிய இருவரும் சமூகவலைதளத்தில் பதிவு செய்து வந்துள்ளார்கள்.
கடந்த மாதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த சிறுவனை வீட்டிற்கு போகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து தனக்கு மிகவும் பிடித்த பேஸ்பால் விளையாட்டை விளையாட போவதாக Ari மகிழ்ச்சியுடன் கூறியுள்ளான்.
இதனிடையில் இரு தினங்களுக்கு முன்னர் Ari-க்கு திடீரென உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவசர அவசரமாக மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளான்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் Ari பரிதாபமாக உயிரிழந்துள்ளான். தனக்கு மிகவும் பிடித்த Red Sox பேஸ்பால் விளையாட்டு அணி குறித்து தகவலை கேட்ட நிலையிலே அவன் உயிர் பிரிந்துள்ளது.
மகன் இறப்பு குறித்தும் பெற்றோர் சமூகவலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
Ariயின் இறப்புக்கு Red Sox அணி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி Red Sox அணி விளையாடவுள்ள போட்டியில் முதல் பந்தை தூக்கி எறிய சிறுவன் Ari-க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating