ஷாப்பிங்கில் மனைவி மும்முரம்: சீன வணிக வளாகங்களில் ஆண்களுக்கு கேளிக்கை அறை..!!

Read Time:1 Minute, 44 Second

201707241311326487_Husband-storage-pods-at-China-shopping-malls-to-take-care-of_SECVPFபொருட்கள் வாங்க தனது மனைவி மார்களுடன் கடைக்கு செல்லும் ஆண்கள் சலிப்படைகின்றனர். ஏனெனில் பெண்கள் துணிமணிகள், நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேர்வு செய்வதில் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றனர்.

இதனால் நேரம் போகாமல் பொழுதை போக்குவதில் கணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதை போக்க சீனாவில் உள்ள ஒரு வணிக வளாகம் (ஷாப்பிங் மால்) ஒரு புதிய ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி மனைவிமார்களுடன் ஷாப்பிங் வரும் கணவன்மார்களுக்கு (ஆண்கள்) தனியாக ஒரு கேளிக்கை அறை அமைத்துள்ளனர். அதில் அவர்கள் அமர இருக்கை போடப்பட்டுள்ளது. அவருக்கு முன்னால் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய டி.வி. உள்ளது.

அதன் மூலம் டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்கலாம். வீடியோ கேம்கள் விளையாடலாம். மேலும் தங்களது செல்போன்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இந்த வசதி ஷாங்காயில் உள்ள ‘குளோபல் கார்பர் என்ற வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கேளிக்கை அறைக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது அமைக்கப்பட்டது. இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே மற்ற வணிக வளாகங்களும் இதை செயல்படுத்த உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமி கர்ப்பம்: கைதான டிரைவர் சேலம் ஜெயிலில் அடைப்பு..!!
Next post இறைச்சிக் கடைக்குள் 2-வது மனைவியின் தலையை துண்டித்து கொன்ற கணவர்..!!