கல்லீரல் பாதிப்பு ஆயுட்காலத்தை குறைத்துவிடும்..!!

Read Time:2 Minute, 21 Second

201707241005219833_Liver-damage-can-also-reduce-life-expectancy_SECVPFமாரடைப்பு, புற்றுநோய் போல கல்லீரல் பாதிப்பும் ஆயுட்காலத்தை குறைத்துவிடும் தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் பிரித்தெடுத்து சிறுநீரகத்திற்கு அனுப்பும் முக்கிய பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. சிறுநீரகத்தை போல கல்லீரலும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு அதன் நடுவில் பித்தநீர் பை அமைந்திருக்கும்.

அது பித்தநீரை உற்பத்தி செய்து அமிலம் கலந்த உணவு சுமுகமாக செரிமானம் ஆவதற்கு துணைபுரிகிறது. கல்லீரல் பாதிப்புக்குள்ளானால் செரிமான கோளாறு பிரச்சினைகள் ஏற்பட்டுவிடும். கீரை வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் குளோரோபில், நச்சுக்களை வெளியேற்ற உதவும். பூண்டுவையும் சமையலில் சேர்க்க வேண்டும்.

அதிலிருக்கும் அசிலின் கல்லீரல் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. பீட்ருட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் இரைப்பையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது. தேன் கல்லீரலில் உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க துணைபுரியும். தேங்காய் எண்ணெய்யையும் சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். அதில் இருக்கும் நல்ல கொழுப்பு அமிலம் உடல் நலனுக்கு நன்மை சேர்க்கும்.

கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும். கிரீன் டீ பருகி வருவதும் கல்லீரலின் சீரான இயக்கத்திற்கு துணை புரியும். தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் சாப்பிட்டு வரலாம். அதிலிருக்கும் தாதுக்கள் கல்லீரலுக்கு நலம் சேர்க்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எலியும் பூனையுமாக மோதும் பார்த்திபன் – உதயநிதி..!!
Next post பிக்பாஸிலிருந்து வெளியேறிய ஆர்த்தியின் வைரல் ட்விட்… யாரைப் பற்றி தெரியுமா?..!!