ஜோர்டானில் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவத்தினர்: வெளியான வீடியோ..!!

Read Time:2 Minute, 48 Second

625.0.560.320.160.600.053.800.700.160.90ஜோர்டானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் 3 பேரை அந்த நாட்டு ராணுவ வீரர் ஒருவர் துரத்திச் சென்று சுட்டுக் கொல்லும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவானது முதலில் பாதிக்கப்பட்ட அந்த குடும்பங்களுக்கு அமெரிக்க அதிகாரிகளால் போட்டு காட்டப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களின் பார்வைக்கு என வெளியிடமாட்டாது எனவும் அப்போது அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜோர்டானின் தென் பகுதியில் அமைந்துள்ள al-Jafr ராணுவ தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் திகதி குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜோர்டான் ராணுவ வீரர் Marik al-Tuwayha ராணுவ நீதிமன்றத்தால் கடந்த வாரம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

al-Jafr ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்த சதி நடப்பதாக தெரிய வந்ததை அடுத்தே தாம் துப்பாக்கி சூடில் இறங்கியதாகவும், நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் செயலை தம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் Marik al-Tuwayha ராணுவ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜோர்டான் ராணுவம் இதை ஏற்க மறுத்துள்ளதுடன், ராணுவ தலைமையின் உத்தரவு இன்றியும், தற்காப்பு நடவடிக்கையாக அல்லாமலும் நடந்து கொண்டதால் ராணுவ வீரர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஜோர்டான் அரசு முதலில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க ராணுவ வீரர்கள் மூவரும் சட்டத்தை மீறிய நடவடிக்கையில் ஈடுபட்டதால் மட்டுமே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என தெரிவித்திருந்தனர். ஆனால் பின்னர் அந்த அறிக்கையை திரும்பபெற்றுக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரள நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டு..!!
Next post கமலுக்கு கருத்து சொல்ல உரிமை உண்டு: நடிகை கவுதமி கருத்து..!!