அமர்ந்து வேலை பார்ப்பது பின் புறத்தைப் பாதிக்கும்..!!

Read Time:2 Minute, 19 Second

201707260844457097_Sitting-and-working-will-affect-back-side_SECVPFஅலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.டெஸ்க் டெர்ரீர்’ எனப்படும் இந்த பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள்.

அவர்கள், அதிக நேரம் இருக்கையில் அசையாமல் அமர்ந்து வேலை பார்ப்பவர்களின் பின்புறத்தை ஸ்கேன் செய்தார்கள். அப்போது, அவர்களின் ஆசனப் பகுதி தசைகள் சுருங்கியும், சேதமடைந்தும் இருப்பது தெரியவந்தது. அதிக நேரம் அமர்ந்து, அலட்டிக்கொள்ளாமல் வேலை பார்ப்பவர்களின் பின்புறத்தில் கொழுப்பு சேர்கிறது, அது தசை திசுக்களுக்கு உள்ளும் ஊடுருவுகிறது.

இதுதொடர்பாக நுபீல்டு ஆரோக்கிய மையத்தின் பிசியாலஜி துறைத் தலைவர் கிறிஸ் ஜோன்ஸ் கூறுகையில், “ஒருவர் நாள் முழுவதும் இருக்கையில் அமர்ந்திருந்தால், அவருடைய இடுப்பின் முன்புறத் தசைகள் அளவுக்கு அதிகமாகச் செயல்படும். அந்த தசைகள் இறுக்கமாகவும் ஆகின்றன.

அதன் விளைவாக, குறிப்பிட்ட நபர்களின் பின்புறத்தில் அந்த வடிவத்தைக் கொடுக்கும் மூன்று முக்கியத் தசைகளான குளூட்டியஸ் மாக்சிமஸ், குளூட்டியஸ் மீடியஸ், குளூட்டியஸ் மினிமஸ் ஆகியவை பாதிக்கப்படுகின்றன“ என்கிறார்.

ஆண்களுக்குப் பெரும்பாலும் இடுப்பைச் சுற்றி கொழுப்புச் சேர்கிறது என்றால், பெண்களுக்குப் பெரும்பாலும் பின்புறத்தில் கொழுப்பு திரள்கிறது என்றும் கூறுகிறார் ஜோன்ஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடையாளம் தெரியாமல் மாறிப்போன இந்த நடிகை யார் தெரியுமா?..!!
Next post இளம்பெண்களின் மாஸ் குத்தாட்டாம்: செம்ம வீடியோ..!!