கைகளின் கருமையை போக்கும் இயற்கை வழிகள்..!!

Read Time:2 Minute, 43 Second

201707261007192452_Natural-Ways-To-Go-darkening-of-hands_SECVPFவெயிலானது எப்பேற்பட்டவர்களையும் கருப்பாக மாற்றிவிடும். அப்படி கருப்பாக மாறும் இடங்களில் முகம் மற்றும் கை தான் முக்கியமானவை. இவற்றில் தினமும் முகத்திற்கு போதிய பாதுகாப்பு அளிப்போம். ஆனால் கைகளை நாம் கண்டுகொள்ளவே மாட்டோம். இதனால் தான் உடலில் கைகள் மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும்.

எனவே கைகளும் நன்கு அழகாக இருக்க வேண்டுமானால், அதனையும் சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இங்கு வெயிலில் இருந்து உங்கள் கைககளை பாதுகாத்துக் கொள்ள உள்ள வழிமுறைகளை பார்க்கலாம். எலுமிச்சை சாற்றில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், இது பல அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய எலுமிச்சை சாற்றினை கருமையாக இருக்கும் கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, தவறாமல் மாய்ஸ்சுரைசர் தடவிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், எலுமிச்சை சாறானது சருமத்தில் வறட்சியை ஏற்படுத்திவிடும்.

தயிர் கூட சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் சக்தி கொண்டது. அதற்கு தயிரை கைகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இந்த முறை வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. தக்காளி சாற்றினை கைகளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், கைகளில் உள்ள கருமை நீங்குவதோடு, கைகளும் பொலிவோடு இருக்கும். மஞ்சள் தூளை எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிப்படைந்த இடத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

இதை வாரம் 3 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலே கூறப்பட்டுள்ள இயற்கை முறைகளை பின்பற்றி கோடை வெயியில் இருந்து உங்கள் சருமத்தை காத்திடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் இன்பங்கள் எப்படி என்ன செய்யும் ?..!!
Next post நீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மான் குட்டியை நீச்சல்போட்டு மீட்டு வந்த பப்பி: வீடியோ..!!