மலர்களின் தோரணமாய் – ஷிக்கன்காரி சேலைகள்..!!

Read Time:5 Minute, 50 Second

201707290942551154_ladies-like-Shankari-sarees_SECVPFஇந்தியா முழுவதும் ஆடை வடிவமைப்புக்கு என பல பெயர்களும், தொழில்நுட்ப அம்சங்களும் பரவி கிடக்கின்றன. ஒவ்வொரு பிராந்திய கைநுணுக்க மற்றும் கலைநய வேலைபாட்டில் புகழ்பெற்ற முறைகள் இன்றளவும் தனிச்சிறப்பு பெருமையுடன் நிலைத்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற கலை அம்ச ஆடைகள் தனி மெருகுடன், கூடுதல் வனப்புடன் உருவாக்கப்படுகின்றன. அத்தகைய சிறப்புவாய்ந்த சேலைகள் தான் ஷிக்கன்காரி சேலைகள், ஷிக்கன்காரி என்பது ஓர் எம்பிராய்டரி தான். ஆனால் அதன் வடிவமைப்பு உத்திகள், உருவாக்கம், இணைப்பு முறைகள் போன்றவை அதற்கென தனித்துவத்தை தருகின்றன.

இந்தியாவில் லக்னோவை பிறப்பிடமாக கொண்ட ஷிக்கன்காரி வேலைப்பாடு குறித்த குறிப்புகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே கிடைக்கின்றன. இதன் சீரிய வளர்ச்சி என்பது 17-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஜஹாங்கிர் மனைவி நுர்ஜஹான் அறிமுகப்படுத்திய பின் தான் நடந்தேறியது. ஷிக்கன் என்பதன் அர்த்தமும் எம்பிராயிடரி என்பது தான். பழங்காலத்தில் மெல்லிய மஸ்லின் துணிகளில் வெள்ளை நூலால் எம்பிராயிடிரி செய்யப்பட்டதே ஷிக்கன்காரி. இன்றைய நாளில் பலதரப்பட்ட துணிவகைகள் மற்றும் வண்ணங்கள், பிரபலமான அச்சுகள் சேர்ந்தவாறு உருவாக்கப்படுகின்றன.

பூக்களாய் மலர்ந்த ஷிக்கன்காரி வேலைப்பாடு :

பெர்ஷியன் கலை வடிவ பின்னணியில் அழகிய பூக்கள் வடிவமைத்தலே இப்பிரிவின் சிறப்பம்சம். அதாவது ஷிக்கன்காரி வேலைப்பாட்டில் உருவாகும் பூக்கள் துணியோடு ஆண்டுகள் பலவானாலும் நீடித்து நிலைத்திருக்கும். பலதரப்பட்ட பூக்கள் மற்றும் தண்டு பகுதி, இலைகள், பய்ஸலே வடிவங்கள் போன்றவை அழகுற வடிவமைக்கப்படுகின்றன.

மெல்லிய மஸ்லின் ஒற்றை நிற துணியில் வெள்ளை மற்றும் வெள்ளை நூல்கள் கொண்டு அழகுற பூக்கள் எம்பிராய்டரி செய்யப்படும்.

ஷிக்கன் காரி வேலைபாட்டின் சிறப்புகள் :

ஷிக்கன் காரி தொழில்நுட்பம் என்பது மேலோட்டமாக பார்க்கும் போது 2 பகுதிகள் கொண்டதாக தான் தெரியும். ஆனால் எம்பிராய்டரி பகுதிகள் மட்டுமே 36 வகையான மின்னல்களை உள்ளடக்கிய தயாரிப்பு பணிகளை கொண்டது. இதில் மூன்று அடிப்படை உருவாக்க பணிகள் என்பது அச்சிடல், எம்பிராய்டரி, துவைத்தல் போன்றவையிடும்.

மரத்தினால் செய்யப்பட்ட அச்சுகள் மூலம் நீலநிற மை கொண்டு துணியின் மீது அச்சிடப்படும்.

இந்த அச்சு வடிவத்தின் மீது சிறிய பிரேம்கள் கொண்டு ஊசியால் பின்னப்பட்டு எம்பிராய்டரி செய்யப்படுகின்றன. பின்னர் எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள் அந்த அச்சு நிறங்கள் போக வைப்பதற்கு ஏற்ப துவைக்கப்படுகின்றன தண்ணீரில் நனயை வைத்து அச்சு நிறம் போன பின்பு துணி விறைப்புதன்மை உடன் இருப்பதற்கு ஸ்ட்ராச் சேர்த்து உயர்த்தப்படுகிறது.

ஷிக்கன்காரி தையல்கள் என்பதில் ஜலி, டெப்சி, முக்ரி, ஹோல், ஜன்ஜீரா, பாக்யா என பலதரப்பட்ட தையல் முறைகள் உள்ளன.

ஷிக்கன்காரி சேலைகளும், வண்ண பூக்களும்…:

ஒற்றை வண்ண துணியில் வெள்ளை நூலால் உருவான ஷிக்கன்காரி ஆடைகள் தற்போது பல வண்ண நூல்கள் பயன்படுத்தவாறு அழகிய சேலைகள், குர்தில், டூயுனிக்ஸ், குர்தா, அனார்கலி என பல ஆடைகளாய் உலா வருகின்றன. வடிவமைப்பு உத்தியான ஷிக்கன்காரி வேலைபாட்டுடன் நவீன ஆடை வடிவமைப்பு உத்திகள் இணைந்து புதிய ஆடைகளாய் வருகின்றன.

உலக பிரசித்திபெற்ற உயர் சிறப்பு ஷிக்கன்காரி வேலைபாட்டு சேலைகள் வண்ண பூக்கள் மலர்ந்தவாறு வருகின்றன. ஒரு ஷிக்கன்காரி வேலைபாட்டை சேலையில் உருவாக்க சுமார் பத்துநாட்கள் பிடிக்கின்றன. அதற்கேற்ப அந்த எம்பிராய்டரிகள் காலம்காலமாய் நிலைத்து நிற்கின்றன. வெளிர்நிற சாயல், துணி வகையில் வெள்ளை நில பூ பின்னணி கொண்ட ஷிக்கன்காரி சேலைகள் சாதாரண பெண்கள் முதல் பிரசித்தி பெற்ற பெண்கள் வரை விரும்பி வாங்கும் சேலைகளாக உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரினச்சேர்க்கையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகள்..!!
Next post ஜூலிக்கு வேலைக்காரியான ஓவியா.. அடாவடி ஆரம்பம்…! இந்த 6 செயல்களை என்றாவது பிக் பாஸில் கவனித்துள்ளீர்களா?..!!