ஒவியாவுடன் போட்டிப்போட்டு ஆடிய ஜூலிக்கு நேர்ந்த சோகம்! களத்தில் குதித்த பிந்து மாதவி .? பிக்பாஸ் இல்லத்தில் நடப்பது என்ன?..!!

Read Time:2 Minute, 3 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருந்த ஜூலி மற்றும் நடிகை ஓவியா ஒரு வழியாக நேற்றைய தினம் சமரசமடைந்துவிட்டனர்.

இந்த வாரம் நடிகை பிந்து மாதவி வீட்டிற்கு புதிய போட்டியாளராக இணைந்துள்ள நிலையில், அவர் ஜூலி மற்றும் ஓவியா இருவரையும் ஒரு பாடலுக்கு ஆடும்படி கேட்டுக்கொண்டார்.

ஓவியாவுக்கு ஈடுகொடுத்து ஆடமுடியாத ஜூலி, ஒருமுறை கால்தவறி கீழே விழுந்துவிட்டார். இருப்பினும் வலியை பொருட்படுத்தாமல் அவர் எழுந்து மீண்டும் ஆட துவங்கினார்.

இது இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் ஷோவில் வரவுள்ளது. பிக்பாஸ் குடும்பத்தில் 16வது போட்டியாளராக பிந்து மாதவி அறிமுகமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஏதோ புதுசு புதுசாக நடந்து வருகிறது. முதலில் 14 போட்டியாளர்கள் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்று கூறப்பட்டது.

ஆனால், இறுதியில் நமீதா 15வது போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிலையில், கிட்டத்தட்ட 36 நாட்கள் கடந்த நிலையில், 6 பேர் ஏற்கனவே வெளியேறிவிட்டனர்.

மீதமுள்ள 9 போட்டியாளர்களுக்கு இடையில் ஏகப்பட்ட பஞ்சாயத்து. இதனை தீர்த்து வைக்க வாரத்திற்கு இருமுறை பஞ்சாயத்து தலைவராக கமல்ஹாசன் வந்து செல்கிறார். இந்நிலையில், ஓவியாவுக்கு போட்டியாக பிந்து மாதவி களத்தில் குதித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்..!!
Next post ஜனா­தி­ப­தியின் மகளின் தாய்ப்­பா­லூட்டும் புகைப்­ப­டத்தால் சர்ச்சை..!!