பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் ஓவியா..!!
களவாணி ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரபலமாகி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரையும் கவர்ந்து அதிக வாக்குகள் பெற்றுள்ள ஓவியாவுக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதோடு, சில டைரக்டர்களும், நடிகர்களும் ஓவியாவுக்கு தங்களது படங்களில் வாய்ப்பு கொடுக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு பல படங்கள் ஓவியாவுக்கு புக்காகும் நிலை உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே மெட்ரோ பட நாயகன் சிரிஷ் தனது புதிய படத்தில் ஓவியாவுக்கு சான்ஸ் கொடுக்கயிருப்பதாக கூறியுள்ள நிலையில், தற்போது யாமிருக்க பயமேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஓவியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த படத்தின் முதல் பாகத்தில் சிறிய வேடத்தில் நடித்த ஓவியாவுக்கு இரண்டாம் பாகத்தில் வெயிட்டான வேடம் கொடுக்கப்பட உள்ளதாம். இதையடுத்து விஜய்சேதுபதியை வைத்து பாலாஜி தரணீதரன் இயக்கும் படத்திலும் ஓவியா நடிக்கயிருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.