வாஷிங் மிஷினுக்குள் சிக்கி கொண்ட 7 வயது சிறுவன்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 7 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)துணி துவைக்கும் வாஷிங் மிஷினுக்குள் 7 வயது சிறுவன் சிக்கி கொண்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் சிரமப்பட்டு அவனை பத்திரமாக மீட்டுள்ளார்கள்

உக்ரைன் நாட்டின் Kharkov நகரில் வசித்து வரும் 7 வயது சிறுவன் தனது சகோதரியுடன் வீட்டில் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, சகோதரி தன்னை கண்டு பிடித்து விட கூடாது என எண்ணிய சிறுவன் வீட்டில் இருந்த வாஷிங் மிஷினுக்குள் தலையை நுழைத்து உள்ளே ஒளிந்து கொண்டான்.

பிறகு வாஷிங் மிஷினிலிருந்து வெளியில் வர முயன்ற போது அவனால் வர முடியவில்லை. இதையடுத்து பயத்தில் அலறினான்.

பின்னர், சிறுவனின் தாய் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து 4 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

பிறகு புத்திசாலிதனமாக சிறுவனை வெளியில் எடுக்க முயற்சித்த வீரர்கள், அவன் உடலில் வாஷிங் மிஷின் ஓட்டை வழியாக எண்ணெய்யை ஊற்றினார்கள்.

இதையடுத்து சிறுவனின் உடல் பகுதி வழுவழுப்பானது. பின்னர், மெதுவாக அவனை தீயணைப்பு வீரர்கள் வாஷிங் மிஷினிலிருந்து வெளியில் எடுத்தார்கள்.

சிறுவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த தீயணைப்பு வீரர்கள் அவனை தாயிடம் ஒப்படைத்தார்கள்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பமும் ஓவியாவை ஒதுக்க, ஓவியா கொடுத்த பதிலடி..!! (வீடியோ)
Next post ஒரு படத்தில் இத்தனை காட்சிகள் சென்ஸாரில் கட் செய்யப்பட்டதா? அதிர்ந்த திரையுலகம்..!!