காதலில் இரண்டாம் வாய்ப்பு இல்லை: ஆரவ்வை வெறுத்த ஓவியா..!!
தமிழக மக்களின் மிகப்பெரிய பொழுது போக்காக தற்போது இருப்பது, பிரபல சேனல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில், உலக நாயகன் கமலுக்காக பார்க்கப்பட்டாலும், தற்போது நடிகை ஓவியாவிற்காக மட்டுமே பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் ஓவியாவுக்கு தான் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக ஆரவ் மீது கொண்ட காதலால் மிகவும் வருத்தப்பட்டதுடன் அவரை அதிகமாக தொந்தரவு செய்து வந்தார்.
ஆனால், இன்றைய தொடரில், சினேகன் ஆறுதல் கூறி ஆரவ்வுடன் பேச வைத்த பின்னர் ஆரவ் தன்னை காதலிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்பு இனி என் வாழ்க்கையில் வராதே யாருக்கும் இரண்டாம் வாய்ப்பு தரமாட்டேன் என கோபமாக கூறிவிட்டு சென்று விட்டார்.