பெண்களுக்கு அழகு சேர்க்கும் உள்ளாடைகள்..!!

Read Time:6 Minute, 39 Second

201708031132110779_inner-Wearing-for-women_SECVPFபல்வேறு நிறங்களிலும் ஏகபோக வெரைட்டி டிசைன்களிலும் பெண்களுக்கென ஆடைகள் வடிவமைக்கப்பட்டு கொண்டேதான் இருக்கின்றன. பெண்களுக்கும் ரசனை உணர்வு அதிகம். கொண்டை ஊசியில் இருந்து செருப்பு வரை ஒவ்வொன்றிலும் அதீத கவனம் செலுத்தி வாங்குவதுண்டு.

மாக்ஸி கௌன், ஆப் ஷோல்டர் டிரஸ், லேஸ் டிரஸ், பென்சில் டிரஸ், அசிமெட்ரிக் டிரஸ், ட்ரென்ச் டிரஸ், ஹை லோ டிரஸ், மிடி டிரஸ், மினி டிரஸ், ஷர்ட் டிரஸ், பார்ட்டி டிரஸ், பேக்லெஸ் டிரஸ், பிரிஞ் டிரஸ், பாப் ஓவர் டிரஸ், பேபி டால் டிரஸ், ஏ லைன் டிரஸ், லேயர் டிரஸ், லேஸ் அப் டிரஸ், டீஷர்ட் டிரஸ், வ்ராப் டிரஸ், சல்வார் கமீஸ், சாரி, லெஹங்கா சோலி, லாங் ஸ்கர்ட், பலாஸோ பேன்ட், ஜீன்ஸ், போன்று எண்ணிலடங்கா உடைகள் உள்ளன.

எந்த உடை அணிவது என்பது நம் தேர்வுதான். ஆனால் இங்கு தான் பலரும் மனதளவில் விரக்தி அடைவார்கள். உடல் பருமனாக உள்ள பெண்கள் மேற்கூறிய சில உடைகளை அணிய ஆசைப்பட்டும் அது நிறைவேறாத ஆசையாக போய்விடும். அளவான உடல் அமைப்புள்ள பெண்கள் எவ்வித ஆடை அணிந்தாலும் அழகாய் இருப்பார்கள்.

மிகவும் மெலிந்து இருக்கும் பெண்களுக்கும், அதிக உடல் எடையுள்ள பெண்களுக்கும் நவீன உலகம் கொடுத்த வரப்பிரசாதம்தான் இன்னர் கார்மெண்ட்ஸ். ‘‘நாம் அணியும் உடைக்கு ஏற்றவாறு உள்ளாடைகள் தேர்வு செய்யும்போது அந்த உடையானது நம்மை மேலும் அழகாக காட்டுகிறது.

பெண்களின் உள்ளாடையாக ப்ரா, பேன்டீஸ் என இவை இரண்டும் தான் பெரும்பாலான பெண்களுக்கு தெரிந்தவை. ஆனால் இவற்றிலும் பல வகைகள் உண்டு என்பதையும், ஆடைகளை பொருத்து அவற்றை தேர்வு செய்வது பற்றியும் நாம் தெரிந்திருக்க வேண்டும். புஷ் அப் ப்ரா, பேடட் ப்ரா, டீஷர்ட் ப்ரா, கன்வெர்ட்டிபிள் ப்ரா, ஸ்ட்ராப் லெஸ் ப்ரா, ஸ்போர்ட்ஸ் ப்ரா, ஸ்டிக் ஆன் ப்ரா, மட்டர்னிட்டி ப்ரா, நோ சேக் ப்ரா என பல வகைகள் உண்டு. அதேபோல் பேன்டீஸ்களிலும் பாய் ஷார்ட்ஸ், கிளாசிக் பிரீஃப், பிரெஞ்சு கட் பேன்டீஸ், ஹிப்ஸ்டர்ஸ், தாங்ஸ், ஜி ஸ்ட்ரிங், சி ஸ்ட்ரிங், ஒன் சைடு மற்றும் டூ சைடு க்னாட் போன்று வகைகள் உள்ளன.

இவை அனைத்தும் ஒவ்வோர் ஆடைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் டீஷர்ட் போடும்போது பேடட் ப்ரா போடுவதால் நல்ல வடிவம் கிடைக்கும். பார்ட்டி வியர்களுக்கு ஸ்ட்ராப்லெஸ் ப்ரா, குர்தா மற்றும் ஒர்க் வியர் டிரெஸ்களுக்கு டபுள் லேயர்ட் ப்ரா என்று தனித்தனியே உள்ளது. உள்ளாடைகளுக்கென்றே உள்ள கடைகளில், அங்குள்ள பெண்களே எந்த ஆடைக்கு எது பொருந்தும் என்பதை ஆலோசனை செய்து தேர்வு செய்யவும் உதவியாக இருக்கிறார்கள்.

அதே போல் ஸ்கர்ட் மற்றும் பிராக்களுக்கு பாய் ஷார்ட்ஸ், ஜீன்ஸ்க்கு கிளாசிக் பிரீஃப், ஹை வெய்ஸ்டட் ஜீன்ஸ் அணியும்போது பிரெஞ்சு கட் பேன்டீஸ், லோ வெய்ஸ்டட் ஜீன்ஸ், பேன்ட்டுக்கு ஹிப்ஸ்டர்ஸ் போடலாம். ஜி ஸ்ட்ரிங் மற்றும் சி ஸ்ட்ரிங் பேன்டீஸ் லெக்கின்ஸ் மற்றும் டைட்ஸ் போடும்போது அணியலாம்.

நான் குண்டா இருக்கேன், எனக்கு தொப்பை இருக்கு, உடல் அமைப்பிற்கு மாறாக பின்புறமும் தொடைப் பகுதியும் பெரிதாக உள்ளது என்றெல்லாம் நமக்கு நாமே பேசிக்கொண்டு சில ஆடைகளை தவிர்த்து விடுவோம். இனி அதற்கு அவசியம் இல்லை. ஷேப் வியர் இருக்க கவலை எதற்கு? முழு கால்களுக்கு, தொடைகளுக்கு, அடிவயிற்றிற்கு, மேல் வயிற்றிற்கு, பின்புறத்திற்கு என நம் தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டது தான் ஷேப் வியர்.

இதில் ஹை, மீடியம், லோ என்று மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. நம் உடலிற்கு நல்ல நளினமான அமைப்பை தருவதே இந்த ஷேப் வியர். இருக்கும் அமைப்பை விட 1 முதல் 3 இன்ச் வரை தசைகளுக்கு உடலுக்குள் அழுத்தம் கொடுக்கப்படுவதால் எவ்வித ஆடையை வேண்டுமானாலும் பயமின்றி அணியலாம்.

நான் ரொம்ப ஒல்லியா இருக்கேனு வருத்தப்படுறவங்களுக்கு பேடட் ஷேப் வியர் கிடைக்கும். அவர்கள் இதனை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஷேப் வியர் தனித்தனியாகவும் பயன்படுத்தலாம் அல்லது ஒரே ஆடையாகவும் கிடைக்கும். காஜல் அகர்வால் போன்று நல்ல உடல் அமைப்புதான் அனைத்து பெண்களின் சாய்ஸ். அதற்காக சிறு சிறு திருத்தங்களை செய்தால் போதும்.

நம் தன்னம்பிக்கையின் அளவு நாம் அணியும் ஆடையை பொருத்தும் மாறுபடும். நல்ல விதமாக உடை அணியும் போது, நாம் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணம் மேலோங்கும். நம்மை வெளிப்படுத்திக் கொள்வதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு”.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் உடலுறவு வைத்துக்கொள்வதால் இவ்வளவு நன்மையா..?..!!
Next post சந்தோஷமாக இருக்கணுமா…! அப்போ காதலிக்காதீங்க…!!