தாய்ப்பாலின் அவசியம்: ஒரே நேரத்தில் 2,000 தாயார்கள் நிகழ்த்திய சாதனை..!!

Read Time:2 Minute, 32 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70பிலிப்பைன்ஸ் நாட்டில் தாய்பாலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒரே நேரத்தில் 2,000 தாயார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை உலக மருத்துவர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், பல்வேறு காரணங்களுக்காக பலர் இதனை தவிர்த்து விட்டு குழந்தைக்கு கேடு விளைவிக்கும் பவுடர் பால் உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர்.

சர்வதேச அளவில் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார மையம் பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் பிலிப்பைன்ஸை சேர்ந்த 2,000 தாயார்கள் ஒரே இடத்தில் திரண்டு தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளனர்.

இந்நிகழ்வு குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தாயார்கள் பேசியபோது, ‘குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பல நோய்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும்.

இதுமட்டுமில்லாமல், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருப்பதுடன் அறிவாற்றலும் அதிகரிக்கிறது.

ஆனால், பல பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.

தென் கிழக்கு ஆசியாவில் சுமார் 47 சதவிகித பெண்களும், சர்வதேச அளவில் சுமார் 38 சதவிகித பெண்கள் மட்டுமே தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர்.

எனவே, தாய்ப்பாலின் பயன்கள் மற்றும் அவசியத்தை வலிறுத்தும் வகையில் இந்நிகழ்வில் பங்கேற்றதாக உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடிக்கடி அசைவம் சாப்பிடலாமா?..!!
Next post மனைவி வேகமாக உச்சமடைய செய்ய வேண்டிய விஷயங்கள்..!!