ஆண் நண்பருடன் வெளியே செல்ல நடிகைக்கு தடை போட்ட தாய்..!!
இந்தி நடிகை அம்ரிதாசிங் மகள் சாரா அலிகான். இவர், ‘கேதார்நாத்’ என்ற படத்தின் மூலம் இந்தி பட உலகில் அறிமுகமாகிறார். குஷந்த்சிங்ராஜ்புட் ஜோடியாக சாரா நடிக்கும் இந்த படத்தை அபிஷேக்கபூர் இயக்குகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், ‘சாரா அலிகான் ஆண் நண்பர்களுடன் வெளியே செல்லக்கூடாது’ என்று அவரது தாயாரும் நடிகையுமான அம்ரிதாசிங் தடை விதித்து இருக்கிறார். மகள் பற்றி கிசுகிசுக்கள் வந்து விட கூடாது என்பதால், ஸ்ரீதேவி போலவே, இவரும் தனது மகளுக்கு இந்த தடையை விதித்து இருக்கிறார்.
வதந்திகள் பரவினால் மகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் அம்ரிதாசிங் இந்த உத்தரவை மகளுக்கு பிறப்பித்து இருக்கிறார். சாராவுக்கு புகழ் சேர்க்கும் விதத்தில் மட்டுமே செய்திகள், விளம்பரங்கள் வரவேண்டும் என்பதில் அம்ரிதாசிங் உறுதியாக இருக்கிறார்.