“செப்டம்பர் 11” :அல்கொய்தாவின் பயிற்சி வீடியோ!

Read Time:4 Minute, 12 Second

al-jazeera(AlHaida-Video).jpg2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி விமானங்களைக் கொண்டு நியூயார்க் இரட்டை கோபுரத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுடன் பின்லேடன் கலந்துரையாடும் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோவை அல்கொய்தா இப்போது வெளியிட்டுள்ளது. இதனை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

90 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் செப்டம்பர் 11 தாக்குதல் குறித்து பின் லேடன் அல்கொய்தா அமைப்பினருடன் ஆலோசனை நடத்தும் காட்சிகளும், தாக்குதலுக்கு தயாராகும் காட்சிகளும், அதற்காக அல்கொய்தாவினர் எடுக்கும் பயிற்சிகளும் காட்டப்படுகின்றன. இதில் 3 நிமிட வீடியோவை மட்டுமே அல்ஜசீரா ஒளிபரப்பியது. இந்த வீடியோ எப்படி தங்களிடம் வந்தது என்பதை அந்த சேனல் தெரிவிக்கவில்லை.

வீடியோவின் துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் மலைப் பகுதிகளில் லேடனும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ராம்சி பின் ஷிபாவும், அல் கொய்தாவின் ராணுவ பிரிவு தலைவனான அப் ஹப்ஸ் அல் மஸ்ரியும் லேடனுடன் அமெரிக்க தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இதையடுத்து இதற்கான பயிற்சிகள் நடக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன. அபு அல் துராப் என்ற தீவிரவாதியின் தலைமையில் இந்த பயிற்சி நடக்கிறது. இந்தப் பயிற்சியில் ஒருவரை எப்படி வெறும் கையாலேயே தாக்கி நிலை குலையச் செய்வது, தங்களை பின்னால் இருந்து தாக்க முயல்வோரை எப்படி சமாளிப்பது, எப்படி போலி ஆவணங்கள் தயாரிப்பது, கத்தியை எப்படி மறைத்து வைப்பது, அதை வைத்து எப்படி தாக்குவது ஆகிய பயிற்சிகள் அடக்கம்.

செப்டம்பர் 11 தற்கொலை தாக்குதலில் நேரடியாக ஈடுபட்டு விமானங்களை இரட்டை கோபுரத்தில் மோதிய 19 பேரில் ஹமாஸ் அல் ரமாதி, வேய்ல் அல் ஷெமீரி ஆகிய இருவரும் இந்தப் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

இதையடுத்து வரும் காட்சிகளில் கருப்பு உடையில் பின் லேடன் ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை பார்வையிட்டு தீவிரவாதிகளை வாழ்த்தும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.

பின் லேடனை நோக்கி புரட்சி கோஷம் எழுப்பும் தீவிரவாதிகளின் பயிற்சியை லேடன் பார்வையிடுகிறார். அந்த தீவிரவாதிகளில் செப்டம்பர் 11 தாக்குதலில் நேரடியாக பங்கேற்று உயிர் நீத்த தீவிரவாதிகளும் அடக்கம் என அல்ஜசீரா கூறியுள்ளது.

இதையடுத்து வீடியோவில் பேசும் லேடன், இவர்களது திட்டம் (விமான தாக்குதல்) வெற்றி பெற நாம் அனைவரும் கடவுளை வேண்டுவோம். அவர்களது இதயமும் உடலும் பலம் பெற்று இயங்கட்டும் என்கிறார்.

செப்டம்பர் 11ம் தேதி நெருங்கும் நிலையில் இந்த நேரத்தில் இந்த வீடியோவை ஏன் அல்கொய்தா ரிலீஸ் செய்தது என்று தெரியவில்லை. ஏற்கனவே பதற்றத்தில் இருக்கும் அமெரிக்காவை மேலும் அச்சுறுத்தவே இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

al-jazeera(AlHaida-Video).jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. கூட்டணியில் கார்த்திக் இணைகிறார்
Next post இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் பதவி விலகுகிறார் – 7 மந்திரிகள் ராஜினாமா எதிரொலி