எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக காஜல் அகர்வால் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!!

Read Time:2 Minute, 23 Second

201708091717528650_Kajal-Case-Against-Coconut-Oil-company-dismissed-by-Court_SECVPFநடிகர் விஜய் நடித்த ‘ஜில்லா’, ‘மாரி’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்.

இவர், வி.வி.டி. தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் நடித்திருந்தார். இதற்காக அந்த நிறுவனத்துடன், காஜல் அகர்வால் கடந்த 2008ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவர் நடித்திருந்த விளம்பர படத்தை ஓராண்டுக்கு மட்டும் ஒளிபரப்ப வேண்டும்.

ஆனால், இதை மீறி எண்ணெய் நிறுவனம் ஓராண்டுக்கு பின்னரும் விளம்பரத்தை வெளியிட்டதால், இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில், காஜல் அகர்வால் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், ‘ரூ.2.50 கோடி தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும்‘ என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு கடந்த 2011ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ரவீந்திரன் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

காப்புரிமைச் சட்டத்தின் படி, ஒரு விளம்பர படத்தின் உரிமை எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும். ஒரு ஆண்டுக்குத் தான் இந்த விளம்பரத்தை வெளியிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்ய முடியாது. ஒரு விளம்பரப்படம் எடுத்தால், அந்த படத்தின் மீதான முழு உரிமையும், 60 ஆண்டுகளுக்கு அந்த நிறுவனத்துக்கு சொந்தமானது.

இந்த விளம்பர படத்தில் நடித்துக் கொடுத்ததோடு, காஜல் அகர்வாலின் பங்கு முடிந்துவிட்டது. அவர் இதுபோல ஒரு ஆண்டுக்குத்தான் திரையிட வேண்டும் என்றெல்லாம் கோர முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழி நடிகையின் வீட்டில் ஓய்வு எடுக்கும் ஓவியா….!!
Next post பிபிபி செய்தி நேரலையில் ஆபாச வீடியோ..!!