`வேலையில்லா பட்டதாரி-2′ திரையரங்கு உரிமையை கைப்பற்றிய சூப்பர்ஸ்டார்?..!!

Read Time:2 Minute, 18 Second

201708091426030176_VIP-2-Distribution-rights-acquired-by-Malayalam-Superstar_SECVPFவி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் `வேலையில்லா பட்டதாரி-2′.

தனுஷ் – அமலாபால் – கஜோல் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி தமிழில் அகிலமெங்கும் ரிலீசாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தியில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் மலையாள திரையுலகிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இப்படத்திற்கான கேரள விநியோக உரிமையை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் சொந்த நிறுவனமான மேக்ஸ் லேப் சினிமாஸ் மற்றும் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஆசர்வாத் சினிமாசும் இணைந்து கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக ரஜினியின் `கபாலி’ மற்றும் விஜய்யின் `ஜில்லா’ படங்களின் கேரள திரையரங்கு உரிமையை இந்த நிறுவனமே கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

`வேலையில்லா பட்டதாரி-2′ படம் ரிலீசாக இருக்கும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி `தரமணி’, `பொதுவாக எம்மனசு தங்கம்’, `நான் ஆணையிட்டால்’ உள்ளிட்ட படங்கள் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடக்குமுறையை நியாயப்படுத்திய போராட்டம்..!! (கட்டுரை)
Next post “ ஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்..!! (வீடியோ)