வாட்ஸ் ஆப் பயனர்களே…இந்த விடயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா?..!!

Read Time:4 Minute, 17 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் அறிந்திராத, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் சில அம்சங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..

வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது எனலாம். உலகின் மிகவும் பிரபலமான குறுந்தகவல் செயலியாக அறியப்படும் வாட்ஸ்அப் அவ்வப்போது அப்டேட்களின் மூலம் புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் மாதம் ஒரு புதிய அம்சமாவது வழங்கப்படுகிறது.

வாட்ஸ்அப்பில் பல்வேறு அம்சங்கள் நாம் அறிந்திருந்தாலும், நமக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் சில அம்சங்கள் இன்றளவும் நமக்கு தெரியாத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறு நமக்கு அதிக பயன்தரும், அதேசமயம் நாம் அறிந்திராத சில அம்சங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

வாய்ஸ் மெசேஜை அழிப்பது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ் ஆனது ரெக்கார்டு பட்டனை விடுவித்ததும், அனுப்பப்பட்டு விடும். ஒரு வேளை வாய்ஸ் மெசேஜை அழிக்க வேண்டுமெனில், ரெக்கார்டு பட்டனை இடது புறமாக ஸ்வைப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களின் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும்.

பிடித்தமான மெசேஜை மார்க் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் செயலியை அதிகம் பயன்படுத்துபவர் என்றால் அதிகப்படியான குறுந்தகவல் உங்களுக்கு வரும். இவற்றில் உங்களுக்கு பிடித்தமான மெசேஜை புக்மார்க் செய்ய முடியும்.

இதை செய்ய முதலில் புக்மார்க் செய்ய வேண்டிய மெசேஜை தேர்வு செய்து, அதனை அழுத்தி பிடிக்க வேண்டும். பின் மெனுவில் காணப்படும் நட்சத்திர குறியை தட்ட வேண்டும். இவ்வாறு செய்த பின் குறிப்பிட்ட குறுந்தகவல் புக்மார்க் செய்யப்பட்டு விடும்.

நீங்கள் புக்மார்க் செய்த குறுந்தகவலை பயன்படுத்த மெயின் மெனு சென்று “Starred Messages” ஆப்ஷனில் பார்க்க முடியும்.

காண்டாக்ட்களை தேடுவது எப்படி?

வாட்ஸ்அப் காண்டாக்டில் உடனடியாக குறுந்தகவல் அனுப்ப வேண்டிய காண்டாக்டினை ஸ்கிரால் செய்யாமல், பெயரை நேரடியாக தேடியும் கண்டறிய முடியும்.

காண்டாக்ட்களை தவிர நீங்கள் அனுப்பிய குறுந்தகவலையும் வாட்ஸ்அப்பில் தேட முடியும். இதற்கு குறிப்பிட்ட கான்வர்சேஷன் சென்று மெயின் மெனுவில் சர்ச் பட்டன் கிளிக் செய்து உங்களது குறுந்தகவலை தேடலாம்.

வாட்ஸ்அப் அப்டேட் சரி பார்ப்பது எப்படி?

நீங்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது தானா என்பதை சரி பார்க்க, ஸ்மார்ட்போனின் பிளே ஸ்டோர் சென்று “my apps” பகுதியில் அப்டேட் செய்யப்பட வேண்டிய செயலிகளை பார்க்க முடியும். இங்கு வாட்ஸ்அப் செயலி இல்லை என்றால் உங்களது வாட்ஸ்அப் அப்டேட் செய்யப்பட்டுள்ளது எனலாம். மாறாக இங்கு வாட்ஸ்அப் காணப்பட்டால் அப்டேட் என்ற ஆப்ஷன் மூலம் செயலியை அப்டேட் செய்து கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சரும பிரச்சனைகளை தீர்க்கும் முல்தானி மெட்டி..!!
Next post காதலருடன் விமான நிலையம் வந்த ஸ்ருதிஹாசன்..!!